Warning: Cannot modify header information - headers already sent by (output started at D:\WebSpace\kumudam.com\www\usercheck.php:33) in D:\WebSpace\kumudam.com\www\auth.php on line 61 Kumudam.com, Kumudam Health - ஆசிரியர் பக்கம்
சமீபத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் தலைவலி, காய்ச்சலுக்காக சிகிச்சை எடுத்துக் கொண்ட குணசுந்தரி என்ற பெண்ணுக்கு அலர்ஜி ஏற்பட்டு சில பலநாள் சிகிச்சைகளுக்குப் பிறகு பலனின்றி மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார் என்ற தகவலை நாம் எல்லோரும் அறிந்திருப்போம். அந்த பெண்ணுக்கு ‘சிட்ரிஷன்’, ‘ஐமால்’, ‘ரோல்ஸ் 20’, காஸ்கோபின் ப்ளஸ்’ என்ற மாத்திரைகள்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த மருந்துகளுக்கு பொதுவாக அலர்ஜி அல்லது மேற்சொன்ன பெண்ணிற்கு ஏற்பட்ட அனபைலாக்சிஸ் என்ற மிகக் கடுமையான ஒவ்வாமை ஏற்படுவது மிக அரிது. எதிர்பாராமல் குணசுந்தரிக்கு ஏற்பட்ட முடிவு சாதாரண மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கலாம். ஆனால், மருத்துவர்களுக்கு இப்படி ஒரு சாத்தியம் இருப்பது தெரியும்.மேற்சொன்ன மருந்துகளை நாம் ஒவ்வொருவருமே நம் வாழ்நாளில் நிறைய முறை சாப்பிட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. பாதிக்கப்பட்டகுணசுந்தரியும் ஏற்கனவே சிலமுறை சாப்பிட்டிருக் கலாம்.ஒரு மருந்து முதல்முறை எடுக்கும்போது சிலருக்கு அலர்ஜி ஏற்படுத்தலாம் அல்லது 10வது முறை எடுக்கும்போது அலர்ஜி ஏற்படுத்தலாம் என்பது மருத்துவ உலகத்தில் சாத்தியம். ஆனால், இந்தப் பிரச்சனையில் சரியான புரிதல்கள் இரண்டு பக்கமும் ஏற்படாமல் மருந்துகளை எழுதிக் கொடுத்த டாக்டரை தனிமைப்படுத்தி பெரும்பாலான மீடியாக்கள் தவறான சிகிச்சை கொடுத்தவர்போல சித்தரித்தன.இதற்கு வேறு டாக்டர்களும், டாக்டர்களுக்கான சங்கங்களும் எந்த விளக்கங்களையும் போதுமான அளவுக்கு மக்களிடம் கொண்டு செல்லாமல் பிரச்சனையை புரிந்து கொள்ள உதவாமல் மக்களுக்கும், மீடியாக்களுக்கும் தேவையற்ற பயத்தையும், பொறுப்பற்ற முறையில் நாம் சார்ந்து வாழ வேண்டிய மருத்துவத் துறையையும் விமர்சிக்க வழிவகுத்தன.இந்தப் பிரச்சனையில் டாக்டர்கள் சரியான விளக்கங்களையும் மக்களிடம் கொண்டு செல்லாமல் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டு விட்டார்கள்.ஏதோ ஒரு பிரச்சனை என்றால் அதற்கான விளக்கங்களை தனி மருத்துவரோ அல்லது அரசு மருத்துவத்துறையோ சரியான முறையில் மக்களிடம் கொண்டு சேர்ப்பது ஒரு முக்கியமான கடமை. மேற்சொன்ன பிரச்சனையில் இப்படி எதுவும் நடக்காமல் போனதை கண்கூடாக உணர முடிகிறது.
நாம் மருத்துவத் துறையை,மருத்துவர்களை சார்ந்து வாழவேண்டியிருக்கிறது. அதை சரியாக புரிந்து கொள்வதும், அதன் மேல் சரியான விமர்சனங்களை வைப்பதும் நம்முடைய கடமை.