Warning: Cannot modify header information - headers already sent by (output started at D:\WebSpace\kumudam.com\www\usercheck.php:33) in D:\WebSpace\kumudam.com\www\auth.php on line 61
Kumudam.com, Kumudam health - ஆசிரியர் பக்கம்

Email
Password:
Remember Me  
Forgot Password   New Registration
About us | Register | Plan Details |Font Help| Feedback| Ad Tariff | Faq | Site Map|RSSimageRss  
News Headline
Kumudam Welcomes U
          Magazine
Health
ஆசிரியர் பக்கம்
கவர் ஸ்டோரி
தொடர்கள்
ஹெல்த் ஃபுட்
ஹெல்த் ஹிஸ்ட்ரி
மற்றவை
 01.04.10    ஆசிரியர் பக்கம்
வேலைகளைத் தடுத்து, தியேட்டர்காரர்களை வெறுப்பேற்றி, டி.வி. ஷோக்களின் கவனம் இழந்து மூன்றாவது ஐ.பி.எல். ஆரம்பித்துவிட்டது. யூசுப் தான் ஐ.பி.எல். வரலாற்றில் மிக வேமான நூறைத் தொட்டு அன்லக்கி ரன் அவுட்டில் வெளியேறினார். ஷேன்வார்ன் ‘என் வாழ்நாளின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் சச்சின்.ஆனால் நான் பார்த்த மிகச் சிறந்த இன்னிங்ஸ் இதுதான்’ என்று முழுமனதையும் திறந்துவிட்டார். அதிர்ஷ்ட தேவதைக்கு திறமைசாலிகளை தழுவிக் கொள்வதில் எப்போதுமே ஒரு  தயக்கம் காட்டும். யூசுப்பின் ஐ.பி.எல். சதம் அதை காட்டிக் கொடுத்தது. ஹர்ஷாபோக்லே ஒரே ஒரு ‘வாவ்’ மட்டும்தான் அந்த சதத்திற்குப் பொருத்தம்போல பேசினார். இந்தியா வந்த லெஜண்ட் சோபர்ஸ் ‘சிக்ஸர்ஸ் நாட் ஐடியல் கிரிக்கெட்’ என்றார். ஒரு நாலு சிக்ஸர் அடித்துவிட்டால் போதும் என்று ஏங்குகிற ஒவ்வொருவரும் யூசுபின்  சிக்ஸர்களை சாதக,பாதகமாகப் பேசி மழுப்புவதைக் கவனிக்க முடிகிறது.

நான் கவனித்து ஆச்சரியப்படுவது யூசுப் பதானின்  சாதனையை மட்டும் அல்ல. அதற்குப் பின்னால் இருக்கிறபவர்! கல்லூரிப் பையன் மாதிரி இருக்கிற யூசுப்புக்கு கட்டுடல் எல்லாம் இல்லை.தனது ஃபிட்னெஸ்ஸை பவராக மாற்றுகிற வித்தை தெரிகிறது அவருக்கு.சிக்ஸ் பேக் வைத்துக்கொண்டு சைக்கிளில் போகிற குழந்தையை துரத்திப்  பிடிக்க முடியாத சிலரைப் பார்த்திருக்கிறேன். நாம் எதற்கு நம் உடலை தயாராக வைத்திருக்கிறோம்? என்ற கேள்விக்கு கிடைக்கிற விடையில்தான் யூசுப் போன்றவர்களின்  வெற்றிக்கான மந்திரம் இருக்கிறது.
Current Issue
01-05-2012
Previous Issue
16-04-2012
   
Previous Issues
Please give your valuable feedback on this article/programme
( Examples for tamil font
ammaa = அம்மா, kumutham = குமுதம், vaNakkam = வணக்கம், thamiz = தமிழ் )
Tamil font help    தமிழ் English
Click here for sending feedback to a friend
 
<< Back to Homepage
 

About us | Register | Font Help | Feedback | Ad Tariff | Faq | Site Map
Copyright © 2010 Noble Broadcasting Corporation Private Limited . Allrights reserved.
Best view under 1024x764 Resoultion.