Email
Password:
Remember Me  
Forgot Password   New Registration
About us | Register | Plan Details |Font Help| Feedback| Ad Tariff | Faq | Site Map|RSSimageRss  
News Headline
 
Dotcom Spl >> tourism
 

கோட்டைகளின் நகரம் குவாலியர்

 
 
த்திய பிரதேச மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத்தலமாக இருக்கும் குவாலியர் நகரமானது கி.பி.8 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டதாக வரலாறு எடுத்துரைக்கிறது.  சூர்ஜ்சென் என்னும் மன்னன் தொழுநோயால் அவதிப்பட்டு வந்த போது அம்மன்னனுக்கு சிகிச்சையளித்து குணமாக்கிய  குவாலிபா என்னும் முனிவரின் நினைவாக இந்நகருக்கு குவாலியர் என பெயரிடப்பட்டதாக சொல்லப்படுகிறது. 18, 19 ஆம் நூற்றாண்டுகளில், மராத்தியர்களின் ஒரு பிரிவினரான சிந்தியாக்கள், ஆங்கிலேயரின் உடன்படிக்கையுடன், ஆண்டு வந்தனர். பின்பு1780-ல் இந்நகரின் முழுக்கட்டுபாடும் ஆங்கிலேயரின் வசம் சென்றடைந்தது.
 
 
குவாலியர் கோட்டை:
 
ந்தியாவின் ஜிப்ரால்டர் என்றழைக்கப்படும் குவாலியர் கோட்டையானது குவாலியர் நகரின் மையத்தில் பழமை மாறாத அதே கம்பீரத்துடன் நின்று காண்போரை வியக்கும்படி அமைந்துள்ளது. இந்திய கட்டிடக்கலையில் சீன கட்டிடக்கலையின் தாக்கம் ஏற்பட்டதற்கு எடுத்துக்காட்டக உள்ள இக்கோட்டையானது தோமர் வம்சத்தை சேர்ந்த ராஜா மான்சிங் தோமரால் கட்டப்பட்டது. அக்காலத்தில் நிலவிய இந்திய சீன உறவுக்கு சான்றாக சீன டிராகன் உருவங்கள்  இக்கோட்டையின் தூண்களில் செதுக்கப்பட்டுள்ளன. குறுக்கும் நெடுக்குமான வழியை கொண்ட இக்கோட்டையின் பாதை நெடுகிலும் ஜைன சமய தீர்த்தங்கரர்களால் பிரம்மாண்டன பாறைகளில் செதுக்கப்பட்ட  கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.
 
 

ஜெய் விலாஸ் மஹால்:
 
சிந்திய வம்சத்தினரின் இருப்பிடமாக இருந்த ஜெய்விலாஸ் அரண்மனையானது ஜியாஜி ராவ் சிந்தியாவினால் 1809 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இத்தாலிய டஸ்கன் மற்றும் கொரிந்திய கட்டிடக்கலைகளின் கலவையாக உள்ள இந்த அரண்மனையை லெப்டினண்ட் கர்னல். சர். மைக்கேல் ஃப்ளோஸ் என்பவர் வடிவமைத்தார். இந்த அரண்மனையின் ஒரு பகுதியானது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு ஔரங்கசீப், ஷாஜஹான் ஆகியோர் பயன்படித்திய வாள்களும், சிந்தியா வம்சத்தினருடைய பல அபூர்வ பொருட்களும், ஆவணங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதோடு, பல டன் எடையுடைய மிகப்பிரம்மாண்டமான இரண்டு பெல்ஜிய சர விளக்குகள் தொங்கவிடப்பட்டுள்ளன. மேலும் இத்தாலி, பிரான்ஸ் நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட அரிய பொருட்களும், கலைப்படைப்புகள், கலை நுணுக்கம் பொருந்திய பாத்திரங்களும் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
 

கூர்ஜரி மஹால்:
 
ன் மனைவி மிருங்கநயனி என்பவருக்காக ராஜா மான்சிங் என்னும் அரசர் கட்டிகொடுத்த இந்த கூர்ஜரி மஹால் ஆனது 1922 ஆம் ஆண்டிலிருந்து தொல்லியல் துறையினரால் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் 28 கேலரிகளில் 9000 அரிய பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் முதலாம் நூற்றாண்டை சேர்ந்த அரியவகைப் பொருட்களும் காட்சிபடுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டிமின்றி விலையுயர்ந்த மணிகள், ஆபரணங்கள், சிற்பங்கள், ஓவியங்கள், கல்வெட்டுக்கள், ஆயுதங்களும் வைக்கப்பட்டுள்ளன. மேலும், உலகப்புகழ்பெற்ற ஷலபஞ்சிகா யக்ஷி, திருமூர்த்தி நடராஜர், அர்த்தநாரீஸ்வரர், எமராஜன் ஆகியோரின் சிற்பங்களும் உள்ளன. 
 

சாஸ்-பஹு கோவில்:
 
காவிஷ்ணுவின் மற்றொரு பெயரான சாஸ்த்ரபஹு என்னும் பெயரை அடிப்படையாகக் கொண்டு பெயரிடப்பட்டுள்ள இந்த சாஸ்பஹு கோயிலானது கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் கக்வாஹா வம்சத்தை சேர்ந்த மகிபாலன் மன்னனால் கட்டப்பட்டது. குவாலியர் கோட்டையின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள இக்கோயில் பெரியதும் சிறியதுமாக இரண்டு கோயில்களாக உள்ளது. செம்மணல் கற்களால் கட்டப்பட்ட இக்கோயிலின் உள்பகுதியில் எவ்வித வளைவும் இன்றி பிரமிட் போன்ற வடிவத்தில் கட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
 
 
மன்மந்திர் அரண்மனை:
 
 
சித்திரங்களின் மாளிகை என்றழைக்கப்படும் இந்த மன்மந்திர் அரண்மனை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரண்மனையாகும். கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் தோமர் வம்ச மன்னனான ராஜா மான்சிங் தோமரால் கட்டப்பட்ட இந்த அரண்மனை தோமர் வம்சத்தினருக்குப்பின் ராஜபுத்திரர்கள், டில்லி சுல்தான்கள், முகலாயர்கள், ஆங்கிலேயர்கள், சிந்தியாக்கள் என்ற பல வம்சத்தினரின் ஆளுகையின் கீழ் இருந்த மன்மந்திர் அரண்மனையானது வட்டவடிவில் நான்கு அடுக்கு கொண்ட மாளிகையாகும். இந்த அரண்மனையில் சுவர்களில் வண்ணமயமான மலர்கள், இலைகள், விலங்குகள், மனிதர்கள் ஆகிய சித்திரங்கள் தீட்டப்பட்டுள்ளன.  மன்மந்திர் அரண்மனையின் உள்ளே வட்டவடில் உள்ள சிறைச்சாலையில்தான் முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் தனது உடன்பிறந்த சகோதரனான மூரத்தை கொன்றார். மேலும் இங்குள்ள ஜௌகர் என்ற குளம் உள்ளது. இங்குதான் ராஜபுத்திர மன்னர்கள் இறந்த பின் அம்மன்னர்களின் மனைவியர் உடன்கட்டை ஏறி தங்கள் உயிரை மாய்த்துக்கொள்வார்களாம்.
 
 
தேலி கா மந்திர்:
 
 
100 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள தேலி கா மந்திர் குவாலியர் கோட்டைக்குள்ளேயே அமைந்துள்ளது. எண்ணெய் வணிகரி கோயில் என்றழைக்கப்படும் தேலி கா மந்திரின் கூரையானது திராவிடக் கட்டிடக்கலையின் அம்சத்துடனும், இதன் சிற்பங்கள் வட இந்திய பாணியிலும் அமைக்கப்பட்டுள்ளது. இந்து, புத்த மத கட்டிட கலை அம்சங்கள் கலந்துள்ள தேலிகா மந்திர் 8 ஆம் நூற்றாண்டு அல்லது 11 ஆம் நூற்றாண்டு காலக்கட்டத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. முதலில் விஷ்ணு கோயிலாக இருந்த தேலிகா மந்திர் பிறகு சிவன் கோயிலாக மாற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது. இக்கோயிலினுள்ளே அம்மன், நாகங்கள், கருடன், காதலர்கள் சிலைகள் மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் அமைக்கப்பட்டுள்ளன.
 
 
திக்ரா அணை:
 
 
ரபரப்பான குவாலியரின் நகரச்சூழலிருந்து  23 கிலோ மீட்டர் தொலைவில் அமைதி நிலவும் இடமாக அமைந்துள்ள திக்ரா அணை குவாலியர் நகருக்கும், மத்திய பிரதேசத்தின் சில பகுதிகளுக்கும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய அணையானது அப்பகுதி வாசிகளுக்கும் பிடித்தமான இடமாகவும், சுற்றுலா பயணிகளை கவரும் இடமாகவும் உள்ளது திக்ரா அணை.
 
 
கவுஸ் முகம்மது கல்லறை:
 
 
கி.பி. 15 ஆம் நூற்றாண்டில், ஒரு ஆப்கானிய இளவரசராக இருந்து பிறகு துறவியாக மாறிய சூஃபி துறவியாக கவுஸ் முகம்மதுவின் இக்கல்லறையானது இடைக்கால முகலாயக் கட்டிடக்கலைக்கு சிறந்த உதாரணமாகும், முகலாய மன்னர் பாபருக்கு ஆலோசகராக இருந்த கவுஸ் முகம்மது எந்தவொரு அரசியல் அதிகாரத்திலும் இல்லாமல் இருந்தாலும் அவரது கல்லறையை பேரரசர் அக்பர் உட்பட அனைத்து முகலாய அரசர்களும் இவரது நினைவாக இக்கல்லறையை போற்றி பாதுகாப்பதிலும், இதனை அழகுப்படுத்துவதிலும் ஈடுபாடுகொண்டிருந்தனர். மிகப்பிரம்மாண்டமாகவும் ஆடம்பரமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ள இக்கல்லறை மனதை ஈர்க்கும் அழகிய சிற்ப வேலைபாடுகளுடன் இருக்கிறது. கவுஸ் முகம்மதுவின் கல்லறைக்கு அடுத்து இந்துஸ்தானி இசைக்கலைஞர் தான்சேனின்  கல்லறையும் இங்கு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
 
........................................................................................................................................................................................................................................................
RSS Movies Shop
........................................................................................................................................................................................................................................................
........................................................................................................................................................................................................................................................

About us | Register | Font Help | Feedback | Ad Tariff | Faq | Site Map
Copyright © 2014 Noble Broadcasting Corporation Private Limited . Allrights reserved.
Best view under 1024x764 Resoultion.