<
 
Dotcom Spl >> KumudamFinance
31.07.09      பவர் ஆஃப் அட்டர்னி-யின் பயன்கள்
கேள்வி:ஒரு என்.ஆர்.ஐ கொடுத்துள்ள பவர் ஆஃப் அட்டர்னி வைத்திருப்பவர், அந்த என்.ஆர்.ஐ சார்பில் இந்தியாவில் எல்லாவித தேவைகளையும் கையாள முடியுமா?
 
பதில்: பவர் ஆஃப் அட்டர்னி வைத்திருப்பவர், ஒரு என்.ஆர்.ஐ.யின் என்.ஆர்.இ, எஃப்.சி.என்.ஆர், என்.ஆர்.ஓ கணக்குகளில் இருந்து பணம் எடுத்து இந்தியாவில் பணம் பட்டுவாடா செய்யலாம். என்.ஆர்.ஐ சார்பில் இந்தியாவில் முதலீடு செய்யலாம். ஆனால் எடுத்த பணத்தை வெளிநாடு அனுப்பவேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட கணக்கு வைத்துள்ள என்.ஆர்.ஐ.யின் பெயருக்கு மட்டுமே அனுப்ப முடியும். அதுவும்கூட, வங்கிகள் வாயிலாக மட்டுமே அனுப்ப இயலும்.
 
பவர் ஆஃப் அட்டர்னி வைத்திருப்பவர், என்.ஆர்.ஐ சார்பில் உள்நாட்டில் வசிக்கும் ஒருவருக்கு பணத்தை வெகுமதியாக கொடுக்க முடியாது. என்.ஆர்.ஐ.யின் கணக்கில் இருந்து பணத்தை இன்னொரு என்.ஆர்.ஓ/ என்.ஆர்.இ/ எஃப்.சி.என்.ஆர் கணக்குக்கு மாற்றவும் முடியாது. முதலீடு செய்வதைப் பொறுத்தவரை ரிசர்வ் வங்கி அனுமதித்தாலும் குறிப்பிட்ட பவர் ஆஃப் அட்டர்னியால் அது அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பவர் ஆஃப் அட்டர்னி வைத்திருப்பவர் அன்னியச் செலாவணியை கணக்கில் வரவு வைக்க முடியாது.

கேள்வி: ஒரு என்.ஆர்.ஐ கணக்கில் நாமினேஷன் வசதி உண்டா? உண்டு என்றால், நாமினேஷன் செய்யப்படுபவர் ஒரு என்.ஆர்.ஐ.ஆக இருக்க வேண்டுமா அல்லது உள்நாட்டில் வசிப்பவராகவும் இருக்கலாமா?
 
பதில்: அனைத்து வகை என்.ஆர்.ஐ கணக்குகளிலும் நாமினேஷன் வசதி உண்டு.இன்னும் சொல்லப்போனால் நாமினேஷன் வசதியை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே வங்கிகளின் பரிந்துரை ஆகும். நாமினேஷன் செய்யப்படுபவர் ஒரு என்.ஆர்.ஐ. ஆகவும் இருக்கலாம். அல்லது, உள்நாட்டில் வசிப்பவராகவும் இருக்கலாம்.

கேள்வி:டாலர் கரன்சியில் இருக்கும் எஃப்.சி.என்.ஆர் பிக்சட் டெபாசிட்டை இடையிலேயே, அதாவது முதிர்ச்சி அடைவதற்கு முன்னதாகவே பவுண்ட் ஸ்டெர்லிங் கரன்சியில் மாற்றிக்கொள்ள முடியுமா?
 
பதில்: முடியும். ஆனால், டெபாசிட் முதிர்ச்சி அடைந்த பிறகு மாற்றினால் நல்லது. அப்போது வட்டியிழப்பு இருக்காது.

கேள்வி:என்.ஆர்.இ டெபாசிட்களின் மீது இந்தியாவில் கடன்பெற முடியுமா?
 
பதில்: முடியும்.

கேள்வி:என்.ஆர்.ஐ.கள் இந்தியக் கம்பெனிகளின் மாற்றம் செய்யமுடியாத கடன்பத்திரங்களில் (Non-Convertible Debentures) முதலீடு செய்ய முடியுமா?
 
பதில்: முடியும்.

கேள்வி: இந்தியாவுக்கு நிரந்தரமாக திரும்பி வந்துவிட்ட என்.ஆர்.ஐ.ஆக இருந்த ஒருவர், தனக்கு வெளிநாட்டில் இருந்து வரும் ஓய்வூதியத் தொகையை தனது Resident Foreign Currency கணக்கில் வரவு வைத்துக் கொள்ள முடியுமா? அல்லது, ரிசர்வ் வங்கியின் அனுமதி தேவையா?
 
பதில்: வெளிநாட்டில் இருந்து கிடைக்கும் ஓய்வூதியத் தொகையை ஒருவர் தனது ஆர்.எஃப்.சி கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம். அதற்கு பாரத ரிசர்வ் வங்கியின் அனுமதி தேவையில்லை.
 
-எஸ்.கோபாலகிருஷ்ணன்