Email
Password:
Remember Me  
Forgot Password   New Registration
About us | Register | Plan Details |Font Help| Feedback| Ad Tariff | Faq | Site Map|RSSimageRss  
News Headline
 
Dotcom Spl >> cinebits

விஜய் பற்றி மனம்திறந்த நித்யாமேனன்

ரசு முறை பயணமாக பிரதமர் மோடி ஜெர்மனி சென்றபோது நடிகை பிரியங்கா சோப்ரா அவரை சந்தித்து பேசினார். அப்போது, பிரதமர் முன்பு அவர் குட்டைப் பாவடை அணிந்து கால் மேல் கால் போட்டு  அமர்ந்திருப்பது போன்று எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார் பிரியங்கா சோப்ரா.இந்த பதிவை பார்த்த பலரும் பிரியங்கா சோப்ராவுக்கு எதிராக தங்களது கருத்துக்களை தெரிவிக்க ஆரம்பித்தனர். ஒரு நாட்டின் பிரதமர் முன்னிலையில் கால் மேல் கால் போட்டு மரியாதை இல்லாமல் இப்படி அமர்ந்திருப்பதா? அதேபோல், பிரதமரை சந்திக்கும்போது நம்முடைய கலாச்சாரப்படி உடை அணிய வேண்டாமா? என நிறைய பேர் பிரியங்காவை வறுத்தெடுக்க ஆரம்பித்தனர்.


குட்டிப்புலி’ படத்தை தொடர்ந்து சசிகுமார்-முத்தையா இணையவிருக்கும் படம் ‘கொடிவீரன்’. இப்படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அந்த மூன்று கதாநாயகிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளனர். அதன்படி, ‘சாட்டை’ பட நாயகி மஹிமா ஒரு நாயகியாகவும், ‘முனியாண்டி விலங்கியல் நான்காம் ஆண்டு’ பட நாயகி பூர்ணா மற்றொரு நாயகியாகவும், ‘ரேணிகுண்டா’ நாயகி சனுஷா மற்றொரு நாயகியாகவும் நடிக்கவுள்ளனர். இப்படத்தை சசிகுமார் தனது ‘சசிகுமார் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் 10-வது படமாக தயாரிக்கவுள்ளார்.


எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த ‘பாகுபலி-2’ படத்தின் கதாநாயகனாக நடித்தவர் பிரபாஸ். இந்த படத்திற்காக கிட்டத்தட்ட 5 வருடங்களாக எந்த படங்களிலும் நடிக்காமலேயே இருந்து வந்தார். தற்போது ‘பாகுபலி-2’ படத்திற்கு கிடைத்த பெரிய வெற்றியை தொடர்ந்து ‘சாஹோ’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படமும் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இப்படத்தின் கதாநாயகியாக கத்ரீனா கைப், ப்ரிணிதி சோப்ரா, பூஜா ஹெக்டே, அனுஷ்கா ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் வில்லனாக நீல் நிதின் முகேஷ் ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நீல் நிதின் முகேஷ், விஜய் நடிப்பில் வெளிவந்த ‘கத்தி’ படத்தில் வில்லனாக நடித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


விஜய் நடிக்கும் 61-வது படத்தை அட்லி இயக்கி வருகிறார். 3 வேடங்களில் விஜய் நடிக்கும் இந்த படத்தில் ஒரு விஜய் ஜோடியாக நித்யாமேனன் நடிக்கிறார். இது பற்றி கேட்டபோது... “நடிப்பிலேயே எனக்கு இன்னும் திருப்தி ஏற்படவில்லை. நிறைய வித்தியாசமான, சுவாரஸ்யமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். ஆனால் நான் இயக்குனர் ஆகும் ஆசையில் புதுப்படங்களை ஒப்புக்கொள்வது இல்லை என்று கூறப்படுவதில் உண்மை இல்லை. எனக்கு இப்போது அது போன்ற எண்ணம் எதுவும் இல்லை. விஜய் படத்தில் 3 நாயகிகளில் ஒருவராக நடிக்கிறேன். இப்போதுதான் முதல் முறையாக விஜய்யுடன் நடித்திருக்கிறேன். விஜய் மிகவும் அமைதியானவர். சிறந்த மனிதர். படப்பிடிப்பு தளத்தில் கதாபாத்திரம் சம்பந்தப்பட்ட வி‌ஷயங்களை மட்டுமே பேசுவார். தனது கதாபாத்திரத்தை மட்டுமே சிந்திப்பார். உடன் நடிப்பவர்களையும் அந்த பாத்திரமாகவே கருதுவார். விஜய்யுடன் நடித்தது எனக்கு புதுமையான அனுபவம். இந்த படத்தில் அட்லியுடன் பணிபுரிவது மகிழ்ச்சி. தொடர்ந்து நல்ல படங்களில் நடிக்க விரும்புகிறேன்”. இவ்வாறு அவர் கூறினார்.


ரத்குமார் தற்போது கதாநாயகனாக நடித்து வரும் புதிய படம் ‘சென்னையில் ஒருநாள்-2’. சரத்குமார் நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற ‘சென்னையில் ஒருநாள்’ படத்தை போன்று பரபரப்பான திரில்லர் படம் என்பதால் இப்படத்திற்கும் அதே பெயரை வைத்துள்ளனர். பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் கிரைம் நாவல்களின் கதையை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சரத்குமார் ரகசிய உளவாளியாக நடித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இப்படத்தின் படப்பிடிப்பு கோவையில் தொடங்கி நடந்து முடிந்துள்ளது. தற்போது இப்படத்தில் நடிகர் நெப்போலியனும், நடிகை சுஹாசினியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான ‘தென்காசிபட்டணம்’ படத்தில் சரத்குமாரும், நெப்போலியனும் இணைந்து நடித்திருந்தார்கள். அதன்பிறகு 2005-ல் வெளிவந்த ’ஐயா’ படத்திலும் இணைந்து நடித்திருந்தார்கள். தற்போது 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தில் மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். அதேபோல், சரத்குமாரும், சுஹாசினியும் முதன்முறையாக இப்படத்தில்தான் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் புதிய படம் ‘வடசென்னை’. இப்படத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, கிஷார், சமுத்திரகனி, டேனியல் பாலாஜி, கருணாஸ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படம் மூன்று பாகங்களாக உருவாகவிருக்கிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பை விரைவில் தொடங்கவுள்ளனர். இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியும் ஒப்பந்தமாகியிருந்தார். தற்போது விஜய் சேதுபதி இப்படத்திலிருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அவருக்கு பதிலாக இயக்குனரும், நடிகருமான அமீர் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அமீர் ‘யோகி’ என்ற படத்தின்மூலம் நடிகராக அவதாரமெடுத்தார். அதைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த ‘யுத்தம் செய்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். ‘வடசென்னை’ படத்தில் அவர் நடிக்கப்போவதாக வெளிவந்துள்ள செய்தி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.


ஜினிகாந்த் நடிக்கும் 164-வது படமான ‘காலா’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அங்குள்ள தெருக்கள், கடைவீதிகள், தாராவி குடிசைப்பகுதி உள்ளிட்ட இடங்களில் 40 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்க உள்ளது. ரஜினிகாந்த் கருப்பு வேட்டியும், ஜிப்பாவும் அணிந்து தாதா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பின்போது ரஜினிகாந்தை பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டார்கள். அவர்கள் ரஜினிகாந்தை தொடுவதற்கும், பக்கத்தில் நின்று ‘செல்பி’ எடுப்பதற்கும், கைகுலுக்குவதற்கும் முண்டியடித்தனர். இதனால் படப்பிடிப்பில் தடங்கல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ரசிகர்களை அப்புறப்படுத்தி ரஜினிகாந்தை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்து அழைத்துச் சென்றனர். தனியார் பாதுகாவலர்களும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டார்கள். ஆனாலும் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் ஸ்டைலாக நடிக்கும் காட்சிகளை பார்த்து ரசிகர்கள் உற்சாகமாக குரல் எழுப்பியபடி இருந்தனர். அவர்களை பார்த்து ரஜினிகாந்த் கையசைத்தார்.


ஞ்சித் இயக்கத்தில் ரஜினி மீண்டும் நடித்து வரும் படத்துக்கு ‘காலா’ என்று தலைப்பு வைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களில் ஒன்றில் ரஜினி மகேந்திரா நிறுவனத்தின் ‘தார்’ என்ற ஜீப்பின் மேல் அமர்ந்திருப்பார். இந்த போஸ்டரை பார்த்த மகேந்திரா நிறுவனத்தின் எக்ஸ்க்யூட்டிவ் சேர்மன் ஆனந்த் மகேந்திரா, அந்த காரை தனது நிறுவனத்தின் அருங்காட்சியத்தில் வைக்க ஆசைப்படுவதாக தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார். இதற்கு, காலா படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதில் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், மிக்க நன்றி. அந்த வாகனத்தை தற்போது சூப்பர் ஸ்டார் படப்பிடிப்பில் பயன்படுத்தி வருகிறார். படப்பிடிப்பு முடிந்ததும் உங்களிடம் கொண்டுவந்து உறுதியாக சேர்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார். பதிலுக்கு, ஆனந்த் மகேந்திராவுக்கு தனுஷுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


ஸ்வர்யா ராஜேஷ் தற்போது தனுஷ், விக்ரம் படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் துல்கர்சல்மான், நிவின் பாலி ஆகியோருடன் நடிக்கிறார். என்றாலும், இவருடைய சம்பளம் உயரவில்லை என்று தகவல் வெளியானது. இதுகுறித்து கேட்டபோது, ஐஸ்வர்யா ராஜேஷ் அளித்த பதில்... “நடிப்பவர்களுக்கு சம்பளம் முக்கியம் தான். என்றாலும், கதாபாத்திரம் அதைவிட முக்கியம். சிறந்த கதாபாத்திரங்கள்தான் நடிகர், நடிகைகளை உயரத்துக்கு கொண்டு செல்லும். ‘காக்கா முட்டை’ படத்தில் நான் நடித்த வேடம்தான் இதுவரை என்னைப்பற்றி பேசவைத்துக் கொண்டிருக்கிறது. அந்த படத்தில் குறைவான சம்பளத்தில் தான் நடித்தேன். ஆனால் நல்ல பெயர் கிடைத்தது. இன்று வரை நான் சம்பளத்தை விட கதாபாத்திரங்களுக்குத் தான் முதலிடம் கொடுக்கிறேன். என் உயரம் என்னவென்று எனக்குத் தெரியும். எனவே, அதற்கேற்ற சம்பளத்தை வாங்குகிறேன். நான் தற்போது நடிக்கும் ஒரு படத்தில் எனக்கு முன்பு ஒப்பந்தம் செய்யப்பட்ட நடிகைக்கு கூடுதல் சம்பளம் பேசப்பட்டது. ஆனால், எனக்கு குறைந்த சம்பளம் தான் பேசினார்கள். என்றாலும், அது பற்றி யோசிக்காமல் நடித்து வருகிறேன். இந்த படத்துக்குப் பிறகு சம்பளம் உயரும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.


மீபகாலமாக தமிழ் சினிமாவில் கதை திருட்டு, தலைப்பு சம்பந்தமாக பல்வேறு பிரச்சினைகள் எழுந்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது ரஜினி நடித்து வரும் ‘காலா’ படத்திற்கும் பிரச்சினை எழுந்துள்ளது. இயக்குனர் கஸ்தூரி ராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்த ராஜசேகர் என்பவர்தான் இந்த பிரச்சினையை கிளப்பியுள்ளார். அதாவது, ‘காலா’ படத்தின் மூலக்கதை என்னுடையது என்றும், என்னுடைய கதையை திருடிதான் ‘காலா’ படத்தை எடுத்து வருவதாகவும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும், ‘காலா’ படத்தின் தலைப்பும் என்னுடையதே என்றும், கடந்த 1994-ஆம் ஆண்டே தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் இந்த தலைப்பை பதிவு செய்துள்ளேன் என்றும் அவர் அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார். ‘காலா’ படத்தின் படப்பிடிப்புகள் மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது ‘காலா’ படத்தின் கதை என்னுடையது என்று எழுந்துள்ள புகார் படக்குழுவினருக்கு பெரிய தலைவலியை கொடுத்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிப்பதற்கு படக்குழுவினர் தயாராகி வருகின்றனர்.


RSS Movies Shop

This website can secure your private information using a SSL Certificate. Information exchanged with any address beginning with https is encrypted using SSL before transmission.


About us | Register | Font Help | Feedback | Ad Tariff | Faq | Site Map
Copyright © 2010 Noble Broadcasting Corporation Private Limited . Allrights reserved.
Best view under 1024x764 Resoultion.