Email
Password:
Remember Me  
Forgot Password   New Registration
About us | Register | Plan Details |Font Help| Feedback| Ad Tariff | Faq | Site Map|RSSimageRss  
News Headline
 
Dotcom Spl >> cinebits
 
வேகமான பயணத்தில் விஜய் சூர்யா

லிங்குசாமி-சூர்யா கூட்டணியில்-சமந்தா
 
 சூர்யா தற்போது நடித்துக்கொண்டிருக்கும் சிங்கம் 2 படத்தின்  படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதால்  அடுத்து கௌதம் வாசுதேவ மேனன் படத்திலும் , லிங்குசாமி படத்திலும்  நடிக்க ஒப்புக் கொண்டார்  இதில் யாருடைய படம் முதலில் என்ற சர்ச்சை, குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிப்பது என தீர்மானித்து கௌதம் இயக்கத்தில் நடிக்கும் துருவநட்சத்திரம் படத்தை முதலில் ஆரம்பித்து விட்டார் சூர்யா. இதனையடுத்து இரண்டாவதாக  லிங்குசாமி படத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா.  இதன் படப்பிடிப்பு ஆகஸ்டு மாதம் துவங்குகிறது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறாராம் . இந்த தகவலை சமந்தாவே உறுதிபடுத்தியதாக தகவல் . மேலும் சூர்யாவுடன் ஜோடி சேருவதற்காகவே
தனது வெயிட்டை கொஞ்சமாவது கூட்ட நினைக்கிறாராம் சமந்தா -லிங்குசாமி- சூர்யா கூட்டணியில் உருவாகப் போகும் இந்த  படத்திற்கு யுவன்சங்கர்ராஜா இசையமைக்கிறார்.
 இந்த படம் குறித்த மற்ற விவரங்கள் முறைப்படி விரைவில் அறிவிக்கப்படும் என்கிறார்  லிங்குசாமி
 


நேரில் அழைத்து பாராட்டிய அஜீத்
 
'பீட்ஸா' பட இயக்குனர் கார்த்தி சுப்புராஜ்தான் இப்போது கோடம்பாக்கத்தின் பரபரப்பு மனிதராக இருக்கிறார்  .
காரணம், 'பீட்ஸா' எனும் வித்தியாசமான படம் தந்த அவரை தல அஜீத் அழைத்து பாராட்டியதுதானாம். சில வாரங்களுக்கு முன்பு பீட்ஸா பார்த்த அஜீத் அந்த படத்தின் காட்சிகளை ரொம்பவே ரசிச்சாராம். ஒரு சிறிய பட்ஜெட்டில் முற்றிலும் சிறிய நடிகர்களை  வச்சு அதுவும் ரெட் ஒன் டிஜிட்டல்  கேமராவில் படமெடுத்து இத்தனை சுவாரஷ்யமாக தந்ததற்கு அவரை நேரில் அழைத்து பாராட்டினாராம். அவ்வளவு பெரிய நடிகர்  தன்னை நேரில் அழைத்து பாராட்டியதும் ரொம்பவே சந்தோஷத்தில் திகைத்துப் போனாராம் சுப்புராஜ். ஒரு உண்மையான கலைஞனின் மனம் திறந்த பாராட்டு இருவரையும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றிருக்கிறதாம் . கிடைப்பதற்க்கரிய அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட சுப்புராஜ் தன்னுடைய அடுத்தப் படத்தின் கதையை அஜீத்திற்கு சொன்னாராம்..அந்த கதை 'தல'க்கு மிகவும் பிடித்துவிட - இந்த படத்தை நாமளே செய்யலாம் என்று  கூறிவிட்டதாக தகவல்
 

 .
ரெயினாவை உற்சாகப்படுத்திய ஸ்ருதி
 
டோலிவுட்டின் தற்போதைய பரபரப்பு செய்தி இது தான். கிரிக்கெட் வீரர் ரெய்னாவும் நடிகை ஸ்ருதிஹாசனும் நெருங்கி பழுகுவதாக அங்குள்ள நடிகர்கள் காதில் புகை விடுகிறார்களாம் .நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான  ஸ்ருதி... ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர் அதன் பிறகு தனுஷுடன் இணைந்து 3 என்கிற படத்தில் மட்டும் நடித்தார். பெரிய  ஹிட் கொடுத்தும் தமிழில் பெரியளவு வாய்ப்புகள் இல்லாததால்  தெலுங்கில் கவனம் செலுத்திய ஸ்ருதி அங்கே பிஸியான நடிகையாக வளம் வருகிறார் இந்த நேரத்தில்தான்  ஸ்ருதியைத்  தேடி நாள்தோறும் புதிது புதிதாக  கிசுகிசுக்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.ஏற்கெனவே தெலுங்கு நடிகர் சித்தார்த்துடன் இணைந்து பேசப்பட்ட இவர் இப்போது கிரிக்கெட் வீரர் ரெய்னாவுடன் கிசுகிசுக்கப்படுகிறார்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் ரெய்னா சமீபத்தில்  சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக நடந்த ஆட்டம் ஒன்றில் 52 பந்தில் 99 ரன்கள் எடுத்து அசத்தினார். போட்டி நடந்த அன்று  மைதானத்தில் இருந்து அந்த போட்டியை ஸ்ருதி நேரில் பார்த்து ரெயினாவை உற்சாகப்படுத்தினாராம்..
 

 
தியானம் பழக துவங்கிவிட்ட சிம்பு
 
ற்கனவே காதல் சர்ச்சைகளில் பரப்பரப்பாக பேசப்பட்ட நடிகர் சிம்பு இப்போது ஆன்மீகத்துக்கு மாறிவருவதாக தகவல் கசிகிறது மனதில் பட்டதை முகத்துக்கு நேரே எதற்க்கும் பயப்படாமல் சுரீர் என பேசும் குணம் கொண்டவர் சிம்பு..தன்னிடம் தவறில்லாத பட்சத்தில் சற்று குரல் உயர்த்தி பேசி அதிரவைப்பார் என்றெல்லாம் சொல்லப்படும் சிம்பு இப்போது எல்லா விஷங்களிலும் நேர்மாறான நிலையில் இருக்கிறாராம்..கொஞ்சமும் கோபப்படாமல், எதற்கும்  அலட்டிக்கொள்ளாமல் ,அதிகமாக பேசுவதை தவிர்த்து வருகிறாராம் சிம்பு இந்த மாற்றம் அவரது ஆன்மிக உணர்வால் நிகழ்ந்த மாற்றம் என்கிறார்கள்  அவருக்கு நெருக்கமானவர்கள்அதுமட்டுமல்ல முன்பெல்லாம் அசைவ  உணவை விரும்பி சாப்பிடுவார் சிம்பு அதிலும் பிரியாணி என்றால் ஒரு பிடி பிடிப்பார் ஆனால்  இப்போது அசைவ உணவு வகைகளை  சாப்பிடுவதை தவிர்க்கிறார். நட்சத்திர ஓட்டல்களில் நடக்கும் விருந்துகள் விழாக்களில் பங்கேற்பதை நிறுத்தி விட்டார்.
நண்பர்களுடன் சுற்றுவதையும் குறைத்துக் கொண்டார் என்கிறார்கள்  அவருக்கு நெருக்கமானவர்கள்..தற்போது   வாலு, வேட்டை மன்னன் படங்களில் நடித்துகொண்டிருக்கும் சிம்பு நேரம் கிடைக்கும் போதெல்லாம் கண் மூடி தியானம் பழக துவங்கிவிட்டார் என்கிறார்கள்..சித்தர்கள் மீது  மிகுந்த நம்பிக்கை கொண்டவர்  டி .ஆர் ..அதனால் சிம்புவுக்கு தியானம் பழகுவது  கடினமல்ல என்கிறார் டி,ஆரின் ரசிகர்  ஒருவர்
 

 
சசிகுமாருடன் நான் ஈ சுதீப்

ராஜமௌலி இயக்கிய, ‘நான் ஈ’ படத்தில் வில்லனாக நடித்து அசத்தியவர்  சுதீப்.கன்னட நடிகரான இவர் தற்போது புதிதாக நேரடித் தமிழ் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.கமல்ஹாசன் உதவியானர் சாக்ரடீஸ் இயக்குனராக அறிமுகமாகும் இந்தப் படத்துக்கு பிரம்மன் என பெயரிடப்பட்டுள்ளது. சசிகுமார் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருடன் இணைந்து லாவண்யா திரிபாதி, சந்தானம், சூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்த படத்தின்  தயாரிப்பாளர் மஞ்சுவும் சுதீப்பும் ஏற்கனவே நண்பர்கள் என்பதால் கதையை கேட்ட சுதீப் உடனே நடிக்க சம்மதம் தெரிவித்தாராம்..‘நான் ஈ படத்துக்குப் பிறகு தமிழில் ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்த போதிலும் தமிழில் நடிக்க மறுத்தவர், கதைக்காகவும் சசிகுமாருக்காகவும் நடிக்க சம்மதித்தாராம்சுதீப் இப்படி வெளிப்படையாக சொன்னதில் ரொம்பவே சந்தோஷமடைந்தாராம் சசி...  இருவரும் நண்பர்களாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் துவங்குகிறதாம்
 


வேகமான பயணத்தில்- விஜய் சூர்யா
 
விஜய்யும் சூர்யாவும் இருவரும் தங்கள் படங்களின் மூலம்   படுவேகமான பயணத்தில் இருக்கிறார்கள்
இவ்விருவரையும் வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள்.சிங்கம் பார்ட் 2 வும் தலைவாவும் ஒரே நாளில் வெளியிடவேண்டும் எனும் முடிவில் இருக்கிறார்களாம் இதில் தலைவா படத்தை வாங்க கடும் போட்டி நிலவி வருகிற சூழ்நிலையில், 'படத்தை வேந்தர் மூவிசுக்கு கொடுங்க' என்று கூறி விட்டாராம் விஜய்.
அதற்கு உள்ளூர ஒரு காரணம் இருக்கிறதாம்  . ஏற்கனவே வேந்தர் மூவிசுக்கும் ஞானவேல்ராஜாவின் க்ரீன் ஸ்டுடியோ நிறுவனத்திற்கும் கடுமையான தொழில் போட்டி நிலவுவதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுவதுண்டு. இதற்கு உதாரணமாக பல சம்பவங்கள் சொல்லப்படுகிறது அதில் ஒரு காரணமாக ஞானவேல்ராஜா சூர்யாவின் உறவினர் என்கிறார்கள் இந்த ஒரு காரணத்திற்காகவே வேந்தர் மூவிசுக்கு இப்படத்தை கொடுக்க சொல்லி சிபாரிசு செய்தாராம் விஜய். அதே நேரத்தில் தலைவா வரும் நாளில் சிங்கத்தை எப்படியும்  வெளியிட்டே ஆகவேண்டும் என படத்தின் இறுதிக்  கட்ட வேலைகளை பரபரப்பாக முடிக்கிறார்களாம்
 

 
வெயிட்டான ஆன்ட்ரியா
 
மிழில் வெளியான வேட்டை படம்  தெலுங்கில் தடாகா என்ற பெயரில்  ரீமேக் ஆனது . அதில் சமீரா ரெட்டி கேரக்டரில் ஆன்ட்ரியாநடித்தார்  தமிழில் இருந்ததைவிட தெலுங்கில் அந்த கேரக்டரை கொஞ்சம் வெயிட்டாக்கி ஆன்ட்ரியாவுக்கு கொடுத்தார்கள்  படம் பெரிய ஹிட்.
உடனே மூன்று படங்களில் நடிக்க அழைப்பு வந்து அட்வான்சும் வாங்கிவிட்டாராம் ஆன்ட்ரியா.அதிர்ஷ்டம் அதோடு விட்டதா என்றால் அதுதான் இல்லை. தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான வெங்கடேஷுக்கு ஜோடியாக நடிக்கிறார்  ஆன்ட்ரியா.இதற்கிடையில்.. தமிழில் தனக்கு  மேனேஜராக இருந்தவரை  மாற்றிவிட்ட  ஆன்ட்ரியா. புதிய மேனேஜர் வந்த பிறகுதான் இவ்வளவு வெற்றியும்,அதிர்ஷ்டமும் தனக்கு வந்ததாக சொல்கிறாராம் 

 
........................................................................................................................................................................................................................................................
RSS Movies Shop
........................................................................................................................................................................................................................................................
........................................................................................................................................................................................................................................................

About us | Register | Font Help | Feedback | Ad Tariff | Faq | | Watch Online Tamil Movies | Site Map
Copyright © 2010 Noble Broadcasting Corporation Private Limited . Allrights reserved.
Best view under 1024x764 Resoultion.