|
மீண்டும் புலிவாலை பிடிக்கும் நாயகி
திருமண சர்ச்சைக் காரணமாக சில நாட்கள் நடிக்காமல் சினிமாவை விட்டு கொஞ்சம் ஒதுங்கி இருந்த
அனன்யா இப்போது மீண்டும் நடிக்க வந்துவிட்டார். விமல், பிரசன்னா நடிக்கும் புலிவால் படத்தில் தனது ரீ என்ட்ரீயை துவங்கியிருக்கிறார். இப்படத்தில் அவருக்கு போட்டியாக இனியாவும் ஓவியாவும் நடிக்கிறார்கள் என்பதால் தன் முழு நடிப்புத்திறமையை காட்டி மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடிக்க வேண்டும் என்று தன் நலம்விரும்பிகளிடம் சொல்லி வருகிறாராம்.
புலிவாலை விடாமல் இருந்தால் சரிதான்.
டோலிவுட்டில் பிசியாகும் ஆண்ட்ரியா
வேட்டை படத்தின் தெலுங்கு ரீமேக்கான தடாகா வில் சமீரரெட்டி ரோலில் ஆண்ட்ரியா நடித்தார். இந்த படம் தெலுங்கில் படு ஹிட்டாக, ஆண்ட்ரியாவை டோலிவுட் ரசிகர்கள் தங்கள் மனதில் வைத்துக் கொண்டாட துவங்கிவிட்டனர். இதனால் டோலிவுட்டின் வெங்கடேஷ் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயின் ஆகிவிட்டார் ஆண்ட்ரியா.
கோலிவுட் பக்கம் இனி வருவீங்களா...?
மொட்டை மாடியில்தான் ட்யூன் போடுவேன்.
ஒரு சின்ன சிட்டிவேஷனுக்குக் கூட வெளிநாட்டிற்கு போனால்தான் ட்யூன் போட முடியும் என்று சொல்லும்சில இசையப்பாளர்களுக்கு மத்தியில் எந்த சூழ்நிலையிலும் வெளிநாட்டிற்கு போய் டியூன் போடுவதில்லை என்ற முடிவோடு இருக்கிறார் இளம் இசையமைப்பாளர் அனிரூத். எந்த டியூனாக இருந்தாலும் ஆழ்வார் பேட்டை மொட்டை மாடியில் ஜாலியாக உட்கார்ந்துதான் இசையமைப்பேன் என்கிறார். அதுவுமில்லாமல் வெளிநாட்டிற்கு போய் டியூன் போடுவதால் தயாரிப்பாளருக்கு பணம் வேஸ்ட், எனக்கு டைம் வேஸ்ட் என்கிறார்.
ரொம்ப சரி
விரக்தியில் திவ்யா
ஹீரோயினாக நடிப்பது எளிதான காரியமல்ல. அழகாகவும், உறுதியாகவும் இருப்பது போல் தோன்றினாலும் உள்ளுக்குள் மனம் உடைந்துபோகும் தன்மைதான் அதிகம் இருக்கும்.அதிர்ஷ்டமும், படத்தின் வெற்றியும் தான் நடிகையின் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது. 10 வருடங்கள் கடந்து நான் சினிமாவில் இருந்தாலும் என்னைபற்றி தாழ்வாக சிலர் எண்ணும்போது கதறி அழுதிருக்கிறேன். நடிகையின் வாழ்க்கை சொகுசானது என்பது பொய். தோல்வியின் போது உடனிருப்பவர்கள் செய்யும் பரிகாசம் மனதைகவலையடைய செய்கிறது. அதற்காக உயிரை மாய்த்துக்கொள்வது சரி அல்ல. வாழ்க்கை ஒரு சக்கரம். வெற்றி தோல்வி மாறி மாறி வரும் என்பதை உணர வேண்டும் என்று பாலிவுட் நடிகை ஜியா கான் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
உண்மைதான்...!
கிளாமராக நடிக்க தயார்
ஆரம்பத்தில் கிளாமராக நடிக்கமாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தார் இனியா. ஆனால் அதுவே அவருக்கு பல படவாய்ப்புகள் பறிபோக காரணமகிவிட்டது. இதனால் மிகவும் மனம் நொந்துப் போன இனியா இப்படியே போனால் சினிமாவில் நீடிக்க முடியாது என்பதைப் புரிந்துக் கொண்ட இனியா,சினிமாவில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடிக்க வேண்டுமென்றால் நடிப்போடு சேர்த்து கிளாமரும் காட்டினால்தான் முடியும் அதனால் இனி மிதமான ரசிக்க தகுந்த அளவிற்கு கிளாமர் காட்ட முடிவெடுத்துவிட்டதாக தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி வருகிறார் இனியா.
அட...
காமெடி புயலுக்கு நாயகியாகும் விருத்தகிரி நாயகி
இரண்டு வருட இடைவேளைக்குப் பிறகு இரட்டை வேடத்தில் வடிவேலு நடிக்கும் கஜபுஜ புஜபல தெனாலிராமன் படத்தில் வைகப்புயலுக்கு ஜோடியாக நடிக்க சினேக உல்லால், பார்வதி ஓமனக்குட்டன் என பலரை அணுகியும் யாரும் சம்மதிக்காத நிலையில் கேப்டனின் விருதகிரி படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக நடித்த மீனாட்சி தீட்ஷித் வைகைப் புயலுடம் ஜோடி சேர ஒப்புக்கொண்டார்.
அது சரி...
கேன்சர் பயத்தில் சமந்தா
தற்போது சில நடிகைகளை கேன்சர் பயம் வெகுவாக தொற்றிவருகிறது. சிவப்பதிகாரம் மம்தா மோகன்தாஸ் , மனீஷகொய்ரலா ஆகியோர் கேன்சரால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியும் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால் தனது இரண்டு மார்பகங்களையும் நீக்கிவிட்டு செயற்கை மார்பகத்தை வைத்துக்கொண்டார். இதேப் போல் தனக்கும் கேன்சர் பாதிப்பு வந்துவிடுமோ என்று பயந்த சமந்தா தன்னை கேன்சரில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முன்னெச்சரிக்கையாக கேன்சர் தடுப்பூசி போட்டுகொண்டுள்ளார். இதனை தனது ட்வீட்டரில் பதிவு செய்த "நான் பயத்தால் கேன்சர் தடுப்பூசியை போட்டுக்கொள்ளவில்லையென்றும் விழிப்புணர்வினால்தான் கேன்சர் தடுப்பூசியை போட்டுக்கொண்டதாகவும் பதிவுசெய்துள்ளார். மேலும் பெண்கள் மட்டுமின்றி அவர்களின் குடும்பத்தில் இருப்பவர்களும் கேன்சரின் கொடிய பாதிப்பில் சிக்காமல் இருக்க கேன்சர் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் தன் ட்வீட்டர் பக்கத்தில் பதிவுசெய்துள்ளார்.
வருமுன் காப்பது நல்லதுதானே...!
வேண்டாம் ரசிகர் மன்றம் விஜய்சேதுபதி
தென் மேற்கு பருவக்காற்றில் அறிமுகமாகி, பீட்ஷா, நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணேம், சூது கவ்வும் என தொடர்ந்து வித்தியாசமான படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த விஜய் சேதுபதி இப்போது ரம்மி, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பால குமாரா, பண்ணையாரும் பத்மினியும், , சங்குதேவன் என்று நடித்து வருகிறார். இதில் சங்குதேவன் படத்தில் அதிரடியான ஆக்ஷன் நாயகனாக வலம் வரப் போகிறார். இது பற்றி நீங்களும் ஆக்ஷன் ஹீரோவகி விட்டிர்களா என அவரது திரையுலக நண்பர்கள் கேட்டதற்கு ஆக்ஷன்,காமெடி என எந்த படமாக இருதாலும் எனக்கு கதைதான் முக்கியம், கதைக்குதான் நான் முக்கியத்துவம் தருவேன். நல்ல கதையை யார் சொன்னாலும் அதை நான் தவறவிடமாட்டேன் என்றும் மேலும் தனக்கு ரசிகர் மன்றங்களை என்றைக்கும் திறக்க அனுமதிக்க மாட்டேன் என்றும் சொல்லிவருகிறார்.
பிழைக்கத் தெரிந்தவர்...
|