* "இளங்கோவன் வந்து கேக் ஊட்டி விட்டிருக்கிறார். நிறைய எதிர்பார்ப்புகள். ரொம்பவும் 'வெயிட் பார்ட்டி' ஆகிட்டீங்க கேப்டன். வாழ்த்துகள்" என்றதும், "இன்னும் நிறையவே எதிர்பார்க்கலாம். செப்டம்பர் செகண்ட் வீக்கில் இருந்து 'கவுன்ட் டவுன் ஸ்டார்ட்' " என்று சொல்லி சிரிக்கிறார்.
(டெல்லியிலிருந்து ஸ்டார்ட் ஆகுமா?) 
* "ஒரு படம் ஓடிட்டா போதுமுங்க. இந்த ஆர்ட்டிஸ்டுகள் கொடுக்கிற அலப்பரை தாங்க முடியலிங்க" என்று சொல்லி ரொம்பவே சலித்துப் புளித்துப் போனார் 'முத்துக்கு முத்தாக' பட யூனிட் பிரபலம். "அப்படி என்ன அலப்பரை, யாரு கொடுத்தது?". "நடிகை ஓவியாதான். சின்னாளப்பட்டி ஊருக்கு கேரவன் வந்தாதான் ஆச்சுன்னு சொல்லி அடம்பிடிச்சது. காய்ச்சல், மண்டைவலின்னு பட்டறையை போட்டிருச்சு. வேற வழி தெரியல. கேரவனை கொண்டு வந்தோம்" என்கிறார் யூனிட் பிரபலம்.
(பழக்கப்படுத்திவிட்டு இப்போது புலம்பி என்ன பயன்?) * "நேத்து வரை 'சங்கரன்கோவில்' படத்துக்காக ஸ்டார்ட்- கட் சொன்னார். இன்னிக்குப் பார்த்தா ஆளைக் காணோம். பாவமுங்க புவன கண்ணன்" என்று பழைய இயக்குநருக்காக ரொம்பவே கண்ணீர் விட்டார், உதவி இயக்குநர். புதிதாக வந்திருக்கிற இயக்குநர் பழனிவேல் ராஜாவுக்கு இனி விசுவாசியாக இருக்கவேண்டும். ஏனிந்த மாற்றம்? ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனைத்தான் கேட்க வேண்டும்.
('கலாட்டா கண்ணன்கள்'னு டைட்டிலை மாத்திடுங்க!) * "என்னையும் மாஸ்டரையும் விடாம துரத்தி துரத்தி நியூஸ் போடுறாங்களே. அந்த நடிகையை மட்டும் எழுத மாட்டேங்கிறாங்க. பொலிடிக்கல் லீடர் என்பதால் பயப்படுறாங்களா? நான் மட்டும் என்ன பாவம் செய்தேன்" என்று ரொம்பவும் கண்ணீர் விட்டிருக்கிறார் தாரா நடிகை. அதுசரி, இவரது பார்வையில் பட்டுவிட்ட அந்த நடிகை யார்? பொலிடிகல் லீடர் யார்? தலைமையை மீறிய பாதயாத்திரை தலைவரும், 'இத்தாலிய கண்' நடிகையும் என்கிறது ஆந்திரத்து

ஆந்தை.
(பெரிய்ய்ய...இடமாச்சே!) * கல்யாணத்திலும் அவசரம். குழந்தை பெற்றுக்கொண்டதும் அவசரம். இப்போது வாய்ப்புகள் தேடுவதும் அவசியம் என்று அவசரத்துடன் ஓடிக்கொண்டிருக்கிறார் நடிகை பாரதி. பணம் இல்லையென்றால் இல்வாழ்க்வையில் இடைவெளி விழுந்துவிடும் என்கிற பயம் வந்துவிட்டதாம். பிள்ளையை 'கசின்' வீட்டில் விட்டுவிட்டு அக்கா வேடங்களுக்காக அப்ளிகேஷன் போட்டுக் கொண்டிருக்கிறார்.
(பணம்படுத்தும் பாடு..!) * மணவிலக்கு பெற்றுவிட்ட லலிதகுமாரி மெட்டியை கழற்றிவிட்டார். தாலியையும் கழற்றிவிட்டார். மாஜி கணவனாகி விட்டாலும் கலகலப்பாக பிரகாஷ்ராஜூடன் ஆகஸ்டு 23 வரை பேசிக்கொண்டிருந்தவர் இனியும் பேசுவாரா என்பது சந்தேகம்தான். மன உளைச்சல் நிவாரணம் தேடி மகள்களுடன் வெளிநாடு சென்றுவர திட்டமிட்டிருக்கிறார்.
(புதுமைப்பெண்ணை வாழ்த்துவோம்!)