* கடுமையான கால் வலியால் நடக்க முடியாமல் அவதிப்பட்டு  வந்த மனோரமா, மூட்டு ஆபரேஷன் செய்து கொண்டு வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். பிரகாஷ்ராஜின் முன்னாள் மனைவி லலிதகுமாரிதான் மருத்துவமனையில் உடனிருந்து கவனித்துக் கொண்டாராம். கமல், கே.பாலசந்தர், ராஜசுலோசனா உள்ளிட்ட ஒரு சிலர் மட்டுமே நேரிலும் போனிலும் நலம் விசாரித்துள்ளனர். மற்றவர்கள்? ('ஆச்சி'ங்கிறதெல்லாம் வெறும் பேச்சுக்குத்தானா!)
* "கண்ணைப் பார்த்து வருது. மனசைப் பார்த்து வருதுன்னு சொல்றதெல்லாம் சும்மா! கவர்ச்சிதான் காதலுக்கு காரணம்" என்கிறார் சோனா. (அனுபவம் பேசுதுங்கோ!)
* புதுமுகங்கள் நடிக்கும் 'கல்லூரி காலங்கள்' படத்தின் படப்பிடிப்பை நடத்த ஈரோடு மாவட்டத்தில் பல கிராமங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. "ஊரை அசிங்கப்படுத்திடுவீங்கப்பா..." எனக்கூறி ஆளாளுக்கு விரட்டியடிக்க ஒரே ஒரு கிராமத்தினர் மட்டும் ஆதரவு தந்துள்ளனர். அதற்கு நன்றிக்கடனாக 300 மரக்கன்றுகளை அந்தக் கிராமத்தில் நட்டு வந்துள்ளது 'கல்லூரி காலங்கள்' டீம். (நல்ல சிந்தனை. மற்றவர்களும் பின்பற்றலாமே)
* பொன்னாடைகள் மீது இயக்குநர் பாலாவுக்கு அப்படி என்ன கோபமோ  தெரியவில்லை. சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்றதற்காக சிலர் பொன்னாடை அணிவித்த போது, "எனக்கு போர்த்தறதை விட ஒரு பிச்னைக்காரனுக்கு போர்த்தியிருந்தா குளிருக்கு உதவியா இருந்திருக்குமே" எனக் கூறியிருக்கிறார். (என்ன அர்த்தமோ! கடவுளுக்கே வெளிச்சம்)
* ரம்பாவுக்கு சென்னையில் நேற்று (ஜனவரி 27) நிச்சயதார்த்தம். வருங்கால கணவர் இந்திரன் (என்னவொரு பெயர்ப்பொருத்தம்!) ஒரு பரிசுப்பொருளை ரம்பாவுக்கு கொடுத்து அசத்தியிருக்கிறார். திருமணம் முடிந்த பிறகுதான் அதைப் பிரித்துப் பார்க்க வேண்டும் என அன்புக்கட்டளையும் போட்டிருக்கிறார். (முதலிரவுக்கு முன்பே பிரிச்சுப் பார்த்துடலாம்ல..)
* ரெட்டைக்குதிரையில் சவாரி செய்ய நடனப்புயலுக்கு க்ரீன் சிக்னல் கிடைத்து விட்டதாம். சென்னை வந்தால் அண்ணாநகர் சாந்திகாலனி வீடு. வெளியூர் என்றால் நம்பர் நடிகை இருக்குமிடமாம். (மகாபலிபுரம் ரோடு பண்ணைவீடு யாருக்காம்?) |