* "எல்லா வீடுகளிலும் கணவர் மனைவிக்கு அடங்கியவர்தான். அஜீத்தும் ஷாலினிக்கு அப்படித்தான். பவர் ஆஃப் சைலன்ஸ்" என்கிறார் 'சிவா  ஜி' ராம்குமார். ('அசல்' வார்த்தை!)
* திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கவும் தயார் என கூறி வருகிறார் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி. (வேணாம் சார்...ரொம்ப ரிஸ்க்)
* பார்த்திபன் மகள் கீர்த்தனா விரைவில் படமியக்கப்போகிறார். தற்போது ஏ.ஆர்.ரகுமானிடம் இசை கற்று வருகிறார். கேட்டால், "இசை தெரிந்தால்தானே இயக்குநர் துறையில் முழுமை பெற முடியும்" என பளிச் பதில் வருகிறது. (ஜெயிச்சுடுவீங்க)
* "தமிழில் நீங்கதான் நம்பர் ஒன் நடிகையாமே" என தமன்னாவிடம் கேட்டோம். "நான் அதிர்ஷ்டத்தை ரொம்ப நம்பறவ. நம்பர் ஒன்னா இல்லையா என்கிறத என்னோட அதிர்ஷ்டம்தான் முடிவு செய்யணும்" என்கிறார். அம்மணியின் தற்போதைய சம்பளம் ஒரு 'சி' யாம். (நடிகைகள் ஏரியாவுல மிளகாய் நெடிக்கு இதுதான் காரணமா?)
* சினிமா தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, தி.மு.க.வில் இருந்து ம.தி.மு.க.வுக்கு வந்தவர். ஆனாலும், தனது இதயத்தில் எப்போதும் நீக்கமற நிறைந்திருப்பவர் கலைஞர்தான் என இப்போதும் கூறி வருகிறார். (இதயத்தில் இடம்!) |