* சரத்குமார்- ஸ்ரேயா நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ள 'ஜக்குபாய்' வருகிற 29ம் தேதி திரைக்கு வர உள்ளது. முன்னதாக 27ம் தேதியன்று சென்னை சத்யம் தியேட்டரில் சிறப்புக்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். ரஜினி, கமல் உள்ளிட்ட திரைப்படத் துறையினருக்காகவே இந்த ஸ்பெஷல் ஷோ. அப்போது தியேட்டர் வளாகத்தில் பெரிய உண்டியல் வைக்கப்பட உள்ளது. படம் பார்த்து விட்டு வருபவர்கள் தங்களால் இயன்ற தொகையை உண்டியலில் போடலாம். அவ்வாறு சேரும் தொகையை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்க உள்ளனர்.
(நல்ல யோசனை...)
* "ரெண்டரை அடி உசரம் இருந்துக்கிட்டு சம்பளம் ஆறரைக்கோடி கேட்டான்யா! இப்ப மாட்டிக்கிட்டான்ல. ஆப்பு அடிச்சிட்டானுகள்ல!''. இது சமீபத்தில் வருமானவரி சோதனைக்கு இலக்கான ஒரு இயக்குநர் குறித்த ஒரு தயாரிப்பாளரின் வாழ்த்துப் பத்திரம்.
(இதானுங்க வயித்தெரிச்சல் பொங்கல்!)
* "சிம்புவுடன் நடிக்க நான் தயார். நாங்க கேட்கிற சம்பளம் கொடுக்கிற  புரொட்யூசர் இருக்காரா? வசூலுக்கு உத்தரவாதம் தருவாங்களா? சொல்லுங்க" என்கிறார் தனுஷ். (போகாத ஊருக்கு வழி காட்டுறீகளேப்பு...)
* அடுத்த ஆண்டு தனது உலக இசைப்பயணத்தை தொடங்குகிறார் ஜி.வி.பிரகாஷ்.அதற்கான ஆயத்த வேலைகளை இப்போதே தொடங்கி விட்டார்.
( ரகுமா(ன்)மா காட்டிய வழியம்மா..!)
* ஜே.கே.ரித்தீஷ் எம்.பி.யின் அடுத்த படம் 'தாளமில்லா ராகம்'. கதை, திரைக்கதை,பாடல் எழுதி இசையமைத்து இயக்குவது 'யோசி'. ( டைரக்டரின் பெயர்தானுங்க இது). படத்தில் முதல்முறையாக தாளமே இல்லாத பாடல்களை அறிமுகப்படுத்த உள்ளதாக கூறிவருகின்றனர்.
(வசூலில் தாளம் போடாமல் இருந்தால் சரிதானுங்க).
* "ஜனவரி 27- எனக்கும், பிசியோதெரபிஸ்ட் சங்கீதாவுக்கும் கண்ணாலம். குத்துவிளக்கேத்தி வைக்கிறதுக்கு மவராசி வர்றா! வாழ்த்துங்கப்பு" என தனது திருமணத்துக்கு அழைப்பு விடுத்து வருகிறார் காமெடி நடிகர் கஞ்சா கருப்பு.
(ஆமா...தேனிலவு இல்லியாமே! வருத்தப்படாதே கருப்பு ராசா)
* சத்யராஜ் நடித்து வரும் படம் 'வெங்காயம்'. "என்ன சார். பெயரெல்லாம் வித்தியாசமா இருக்கு..." என சத்யராஜிடம் பேச்சைப் போட்டால், "உண்மைதானுங்க. தந்தை பெரியாரா நடிச்சாச்சு. அவரோட விருப்பமான வெங்காயத்தையும் சொல்லணும்ல. அதான் அப்படியொரு டைட்டில்ல படமெடுக்கிறாங்க. நான் நடிகர் சத்யராஜாவே நடிக்கிறேன். சூட்டிங் போயிட்டிருக்கு. சுப.வீரபாண்டியன் எழுதின பாட்டைப் பாடி நடிக்கிறேன்" என்றார்.
(உங்க கேரக்டரையே புரிஞ்சுக்க முடியலயே...) |