Dotcom Spl >> PoliticsBazzar
 
11.09.09     கலைஞர் ரசிகை ஜெயலலிதா
கலைஞர் ரசிகை ஜெயலலிதா

* காங்கிரசின் வாரிசுத் தலைவரை தளபதி நடிகர் டெல்லிக்குப் போய் சந்தித்த சம்பவம் உடன்பிறப்புகளை ஏகத்துக்கும் உசுப்பேற்றி உள்ளதாம். "நடிகரால் சும்மா இருக்க முடியாதா? படம் ஓடணுமா...வேணாமா? வேட்டையாடிப்பூடுவோம் பார்த்துக்குங்க" என மறைமுக மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளனவாம். காங்கிரசுடன் கைகோர்க்க உள்ளூர் தமிழர் முதல் உலகத்தமிழர் வரை எதிர்ப்புகள் தெரிவிப்பதால் தவித்து வருகிறார் தளபதி.

* நெஞ்சம் மறக்காத பழைய பாடல்களை தொகுத்தளிக்கும் ஒரு நிகழ்ச்சி கலைஞர் டி.வி.யில் ஒளிபரப்பாகி வருகிறது. இது ஜெயலலிதாவை ரொம்பவே கவர்ந்து விட்டதாம். அது போன்ற நிகழ்ச்சியை ஜெயா டி.வி.யிலும் வேண்டும் என அம்மா உத்தரவிட, கலைஞரில் நிகழ்ச்சி நடத்தும் குழுவையே ஜெயாவுக்கு அலேக்காக தூக்கிவர ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம். கலைஞர்(டி.வி.) ரசிகை ஜெயலலிதா என்பது சுவாரஸ்யமா இருக்குல்ல..!

* டெல்லி அரசியலும் வேணாம். ஒண்ணும் வேணாம். டெல்லிக்கு ராஜாவா இருக்கிறத விட மதுரைக்கு மகாராஜாவா இருந்துடலாம் என்ற மூடுக்கு வந்து விட்டாராம் மதுரை வாரிசு. இவருக்கு தனிச்செயலாளராக தமிழக ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவரை நியமிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அந்த அதிகாரி மீது வழக்கு உள்ளது. அப்படிப்பட்டவரை நியமிப்பது சரியல்ல என பிரதமர் அலுவலகத்துக்கு உள்துறை அமைச்சகம் அறிக்கை அனுப்பி விட்டது. இதுவும் மதுரைக்காரரின் கொந்தளிப்புக்கு முக்கியக் காரணமாம்.

* கலைஞர்- மாறன் குடும்பங்களுக்கு இடையே பிரச்னை வரும்போது பாலமாக இருந்து செயல்படுபவர் செல்வி. கலைஞரின் மகள். இவரும் இப்போது அரசியல் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளார். தயாநிதிமாறனின் மத்திய சென்னை தொகுதியில் தெருத்தெருவாக சென்று மக்களிடம் குறை கேட்டிருக்கிறார். "இவர், கட்சிக்காக குறைகேட்பது தப்பில்லை. ஆனால் தயாநிதி தொகுதியில் மட்டும் அக்கறை செலுத்துவது ஏன்?" என்று சில உடன்பிறப்புகள் முணுமுணுக்காமலும் இல்லை.