Email
Password:
Remember Me  
Forgot Password   New Registration
About us | Register | Plan Details |Font Help| Feedback| Ad Tariff | Faq | Site Map|RSSimageRss  
News Headline
 
Dotcom Spl >> CinemaReviews
07.12.10      ரத்தசரித்திரம்
ராம்கோபால் வர்மாவின் இயக்கத்தில் வந்திருக்கும் படம் என்பதால் ஆக்ஷன்,திரில்லரை எதிர்பார்த்து தியேட்டருக்கு போகிறவர்கள்...இரத்த வாடையை அனுபவித்துதான் வெளியே வருவார்கள்.ஆரம்பம் முதல் இறுதி வரை...ஒவ்வொரு காட்சியிலும், ஒவ்வொரு ஃபிரேமிலும்...இரத்தம், இரத்தம், இரத்தம்.

ஏற்கனவே தெலுங்கில் ராம்கோபால் வர்மா இயக்கிய ரத்தசரித்திரம் பகுதி ஒன்றின் தொடர்ச்சியாக...சூர்யாவின் ரத்தசரித்திரம் வந்திருக்கிறது.

ஆந்திராவில் நடந்த ஒரு அரசியல் படுகொலையை மையமாகக் கொண்ட படம்...'இது உண்மைச் சம்பவம்' என்ற தலைப்போடு படம் துவங்குகிறது. தனது அப்பாவையும் அண்ணனையும் கொன்றழித்த அரசியல் தலைவர் மற்றும் அவரது கூட்டாளிகளை பழிவாங்குவதற்காக பிரதாப்ரவி எனும் இளைஞன் புறப்படுகிறான்.தனது தந்தை, அண்ணனை கொன்றவர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுத்தள்ளிவிட்டு தப்பியோடுகிறான்.

பழிவாங்குவதற்காக துப்பாக்கி எடுத்த பிரதாப்ரவியை...காலமும் சூழ்நிலையும் கொடுமைக்காரனாக மாற்றுகிறது.அவனது பலம் தெரிந்த ஒரு அரசியல் தலைவர்...அவனை தன்னோடு சேர்த்துக்கொள்கிறார். அரசியலில் நுழைத்து உள்துறை அமைச்சராக்குகிறார்.பணபலம், ஆள்பலம்,அரசியல்பலம் எனும் பாதுகாப்போடு வலம்வரும் பிரதாப்ரவியை பழிவாங்க ஒருவன் வருகிறான். அவன் சூர்யா.

சூர்யாவின் அப்பாவும், அம்மாவும், தம்பியும், உறவினர்களும்... பிரதாப்ரவியால் கொல்லப்பட... சூர்யாவிற்கு பழிவாங்கும் ஆவேசம் வருகிறது.நண்பர்கள் உதவியோடு பிரதாப்ரவிக்கு பொறிவைக்கிறார். அதிலிருந்து பிரதாப்ரவி தப்பிவிட, கொலைப்பழியோடு ஜெயிலுக்குப் போகிறார். அங்கிருந்தே திட்டம் தீட்டி பிரதாப்ரவியை சுட்டுக்கொன்று பழி தீர்க்கிறார்.

இதுதான் ரத்தசரித்திரத்தின் கதை.

திரைக்கதையை நகர்த்தி செல்வதிலும், காட்சியமைப்பிலும் ராம்கோபால் வர்மா முத்திரை பதிக்கிறார். இருப்பினும்...அரிவாள் வீச்சு...கத்திக்குத்து எனும் தமிழ் சினிமாவின் டிரேட்மார்க் திரைக்கதையில் புதிதாக துப்பாக்கி வன்முறையை காட்டியிருப்பது அலுப்பூட்டுகிறது.

விவேக்ஓபராய் பிரதாப்ரவியாக மிகச்சரியாக பொருந்துகிறார்.புரட்சி இளைஞனாக இருந்து அரசியலில் உள்துறை அமைச்சராகும் வரை ஒவ்வொரு காட்சியிலும் விவேக்ஓபராய் இயல்பாய் தெரிகிறார்.

சூர்யாவிற்கு இது மற்றொரு சரித்திரம் எனலாம். ஆவேசப்படும்போதும்... உணர்ச்சிகரமாக கொந்தளிக்கும்போதும்... முகத்தில் தேர்ச்சியான எக்ஸ்-பிரஷனை வெளிப்படுத்தி கைத்தட்டல் வாங்குகிறார். குறிப்பாக தனது அம்மாவும், தம்பியும், உறவினர்களும்... டி.வி.யில் வைத்த குண்டால் சிதைந்து போகும் காட்சியில் சூர்யா...கண்கலங்க வைக்கிறார்.

மற்றபடி...பிரியாமணி, சத்ருகன்-சின்ஹா, ராதிகாஅப்தி, கோட்டா சீனிவாசராவ்,சுதீப் எல்லோரும் தங்களுக்கு கொடுத்த பாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார்கள். அதிகமான இரைச்சல், துப்பாக்கி, இரத்தம், அழுகை என படம் நகர்ந்தாலும்... விவேக் ஓபராயும், சூர்யாவும் மனதில் நிற்கிறார்கள்.

ரத்தசரித்திரம்... வன்முறைக்களம்.

RSS Movies Shop

This website can secure your private information using a SSL Certificate. Information exchanged with any address beginning with https is encrypted using SSL before transmission.


About us | Register | Font Help | Feedback | Ad Tariff | Faq | Site Map
Copyright © 2010 Noble Broadcasting Corporation Private Limited . Allrights reserved.
Best view under 1024x764 Resoultion.

Error. Page cannot be displayed. Please contact your service provider for more details. (32)