நடிப்பு: சஞ்சீவ், சம்பத்குமார், மாஸ்டர் ரின்சன், மாஸ்டர் சச்சின்

, சேத்னா, சிங்கமுத்து
இசை: ஸ்ரீராம் விஜய்
பாடல்கள்: பழனி பாரதி, பிறைசூடன், ஸ்ரீராம் விஜய்
ஒளிப்பதிவு: பிரேம் சங்கர்
கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு: எஸ்.வி.சோலை ராஜா
மாஸ்டர் சஞ்சீவின் டான்ஸ் பார்ட்டி வெற்றி பெறுகிறதா, அவர் முன்பு பணியாற்றிய கல்வி நிறுவனத்தின் டான்ஸ் பார்ட்டி வெற்றி பெறுகிறதா என்பதுதான் கதை. ஹீரோ சஞ்சீவ்தான் வெற்றிபெற வேண்டும் என்பது கதையின் விதி என்பதால் நேரத்தை தின்றபடி போகிறது. இந்த போட்டி ஏன் வந்தது, எதற்காக ஹீரோ மெனக்கெடுகிறார் என்பதற்காக நுரையீரல் நோயை ஒரு அப்பாவி பெண்மீது திணித்திருக்கிறார்கள்.
நா

யகன் சஞ்சீவ், கல்வி நிறுவன அதிபர் சம்பத்குமாருடன் மோதுவதும் பிரிவதும் வலுவிழந்து முழிக்கிறது. பசங்களின் டான்ஸ் அதகளமாக இருப்பது ஆறுதல். நாயகி சேத்னா, பொம்மை.
சம்பத்குமாரின் தம்பியாக நடித்திருக்கிற புண்ணியவான் யாரோ? நம்மை ரொம்பவே படுத்தி எடுத்து ரணகளமாக்கி விடுகிறார். "என்னை எதிர்க்கிறவன் கதி இதுதான்டா" என்று இரண்டுபேரை கடலுக்குள் தள்ளிவிடுகிறார் சிங்கமுத்து!வடிவேலுவை நினைத்து நடித்திருப்பாரோ? படத்தின் பலவீனங்களில் காமெடிக்கு முக்கியப் பங்கு. பிரேம்சங்கரின் ஒளிப்பதிவு, அசோக் மேத்தாவின் படத்தொகுப்பு இரண்டும் தெம்பு.
நீயும் நானும்- வத்தலும் தொத்தலும்!