Dotcom Special
    Weekly Horoscope
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ஒருவார பலன்கள்.
21-02-2018 முதல் 27-02-2018 வரை
 மேஷம்
(அசுவினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் வரை)

குடும்பம்:
மேஷ ராசி அன்பர்கள் கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொள்வது அவசியம். பிறர் சாதாரணமாகப் பேசினாலும் தங்களைப் பற்றித்தான் குறை சொல்கிறார்கள் என்ற எண்ணம் மனதில் ஏற்படக்கூடும். அத்தகைய மனப்பான்மையை விட்டொழியுங்கள். குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து தேவையில்லாமல் வருந்துவீர்கள். சிலருக்கு தற்போதிருந்துவரும் வீட்டிலிருந்து வேறொரு வீட்டிற்கு மாறுவதற்கான சூழ்நிலை உருவாகும். வெளியூர் பிரயாணமொன்றை இவ்வாரத்தில் நீங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். திருமண வயதில் மகனோ அல்லது மகளோ இருப்பின் அவர்களுக்கான வரன் தேடும் முயற்சிகளில் இறங்கலாம்.

உத்தியோகம்:
வேலை பார்த்துவரும் இடத்தில் சக ஊழியர்களால் அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அவை உடனுக்குடன் சரியாகிவிடும். பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படாது. கவலை வேண்டாம்.

தொழில்:
தொழிலதிபர்கள் சற்று பொறுமையாக இருந்துவர வேண்டியது அவசியம். எடுத்தோம், கவிழ்த்தோம் என முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம். ஏனெனில் பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ள வாய்ப்புள்ளது.

வியாபாரம்:
ஆயத்த ஆடைகள் மற்றும் நகைகளை விற்பனை செய்து வருபவர்கள் ஓரளவு வளர்ச்சியை எதிர்பார்க்கலாம். சிலருக்குத் தற்போது செய்துவரும் வியாபாரத்தில் மாற்றம் ஏற்பட சாத்தியக்கூறு உள்ளது.

பெண்மணிகள்:
பெண்மணிகள் கோபப்பட்டுப் பேசுவதை அறவே தவிர்த்துவிடுவது நல்லது. வேலைக்குச் சென்றுவரும் பெண்கள் அலுவலகத்தில் சற்று கவனமாக இருந்துவர வேண்டியது அவசியம்.

அறிவுரை:
பொறுமை, நிதானம் தேவை.

அனுகூல தினங்கள்: பிப் : 24, 25, 26
பிரதிகூல தினங்கள்: பிப் : 21, 22, 23, 27

அதிர்ஷ்ட எண்கள்: 7, 9
 ரிஷபம்
(கிருத்திகை 2_ம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2_ம் பாதம் வரை)

குடும்பம்:
வருமானம் நல்லபடி இருந்தும் எதிர்பாராத வகையில் செலவுகள் ஏற்படுவது மனவருத்தத்தை உண்டாக்கும். மனைவியாலும் சிறுசிறு செலவுகள் ஏற்படக்கூடும். திருமணமாகியுள்ளவர்கள் சிலர் வேலை காரணமாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ இந்த வாரத்தில் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்திருக்க நேரிடும். அது மனக்கவலையை அதிகரிக்க செய்யும். இவை அனைத்தையும் நினைத்து வருந்துவதால் தூக்கமில்லாமல் அவதிப்படுவீர்கள். திருமண வயதிலுள்ள இந்த ராசி ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வரன் அமைவதில் தடங்கல்கள் ஏற்பட்டு பின்பு சரியாகும்.

உத்தியோகம்:
பணிபுரிந்துவரும் அன்பர்களுக்கு ஓய்வில்லா வாரமிது. என்றே சொல்லவேண்டும். காரணம், வேலைப்பளுவும், பொறுப்புகளும் அதிகரிப்பதே ஆகும்.

தொழில்:
தொழில்துறையினருக்கு பிரச்சினைகள் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லையென்றாலும் செலவுகள் செய்வதில் நீங்கள் சற்று கவனமாக இருந்துவர வேண்டியது அவசியம்.

வியாபாரம்:
விற்பனையில் இருந்துவரும் முன்னேற்றம் தொடர்ந்து நீடித்திருக்கும். அது சந்தோஷத்தைத் தரும்.

பெண்மணிகள்:
குடும்ப நிர்வாகத்தை ஏற்றுள்ள பெண்மணிகளுக்கு சிரமமான வாரமே இது. பணிக்குச்சென்றுவரும் பெண்களுக்கு அலுவலகத்தில் கடின உழைப்பு இருக்கக்கூடும். அது மனவிரக்தியை ஏற்படுத்தும்.

அறிவுரை:
ஒருவரையொருவர் புரிந்துகொண்டு நடந்துகொள்ளுங்கள்.

அனுகூல தினங்கள்: பிப் : 21, 22, 23, 24
பிரதிகூல தினங்கள்: பிப் : 25, 26, 27

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6
 மிதுனம்
(மிருகசீரிஷம் 3_ம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3_ம் பாதம் வரை)

குடும்பம்:
மிதுன ராசி அன்பர்களுக்கு சந்தோஷமான வாரமிது. எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கக்கூடிய வாரமாக இது இருக்கக்கூடும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். இனி வராது என்று நினைத்திருந்த பணம்கூட இந்த வாரத்தில் தங்கள் கைகளில் வந்து சேரும். பொன், பொருள் சேர்க்கைக்கு வாய்ப்புண்டு. விடுமுறை நாட்களையொட்டி தங்கள் சகோதரர், சகோதரியின் இல்லத்திற்குச் சென்று வருவீர்கள். தங்கள் குழந்தைகள் இசை, நாட்டியம் போன்ற போட்டிகளில் கலந்துகொண்டு பரிசு, சான்றிதழ் போன்றவற்றை பெறுவது பெருமையளிக்கும். நீதிமன்ற வழக்குகள் தங்களுக்குச் சாதகமாக மாறும்.

உத்தியோகம்:
அலுவலகம் சென்றுவரும் அன்பர்களுக்கு இனிப்பான செய்தியொன்று காத்துள்ளது. சிலருக்கு ப்ராஜெக்ட் சம்பந்தமாக வெளிநாடு சென்று வருவதற்கான வாய்ப்பு கிடைக்கும். தவறாது அதைப் பயன்படுத்திக்கொள்வதன் மூலம் சிறந்த எதிர்காலம் காத்துள்ளது உங்களுக்கு.

தொழில்:
தொழிலதிபர்களுக்கு லாபத்தை ஈட்டித்தரும் வாரமாக இது இருக்கக்கூடும் என்பதால் மகிழ்ச்சிக்குக் குறைவிராது. புதிய விஸ்தரிப்புத் திட்டங்கள் வெற்றியைத் தேடித்தரும்.

வியாபாரம்:
விற்பனை நல்லபடி இருக்கும். லாபம் உயரும். போட்டிகள் இருப்பினும் அதை மிகவும் திறமையுடன் சமாளித்து வெற்றியடைவீர்கள். கொடுக்கல்_வாங்கல் நல்லபடி நடந்துவரும்.

பெண்மணிகள்:
பெண்மணிகளுக்கு மகிழ்ச்சிகரமான வாரமிது என்றே சொல்லவேண்டும். வேலை பார்த்துவரும் பெண்கள் அலுவலகத்தில் எதிர்பாராத வகையில் சில சலுகைகளைப் பெறுவீர்கள்.

அறிவுரை:
ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.

அனுகூல தினங்கள்: பிப் : 21, 22, 23, 27
பிரதிகூல தினங்கள்: பிப் : 24, 25, 26

அதிர்ஷ்ட எண்கள்: 2, 3
 கடகம்
(புனர்பூசம் 4_ம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் வரை)

குடும்பம்:
குடும்பத்திலுள்ளவர்கள் தங்கள் பேச்சைக்கேட்டு நடந்துகொள்ளாதது கோபத்தை ஏற்படுத்தும். உறவினர்கள் மத்தியில் தங்கள் மீதிருந்துவந்த நல்ல அபிப்ராயம் சற்று குறைய வாய்ப்புள்ளது. நெருங்கிய உறவினர் ஒருவரின் வருகையினால் குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு பின்பு சரியாகும். பணவரவு சற்று குறையும். எனவே தேவைக்கேற்ப செலவு செய்யுங்கள். கடக ராசி அன்பர்கள் சிலருக்கு குலதெய்வ வழிபாட்டினை மேற்கொள்வதற்குச் சாதகமாக அமைந்துள்ளன இவ்வார கிரகநிலைகள். அதன்மூலம் மனம் ஓரளவு நிம்மதி பெறும். நீதிமன்ற வழக்குகளில் கடின போராட்டத்திற்குப் பின்பே வெற்றி கிடைக்கும்.

உத்தியோகம்:
வேலை பார்த்துவரும் அன்பர்களுக்கு சுமாரான வாரமே இது. பதவி உயர்வையோ அல்லது ஊதிய உயர்வையோ எதையும் இவ்வாரத்தில் எதிர்பார்க்க முடியாது. எனவே பொறுமையாக இருந்து வரவும்.

தொழில்:
தொழிலில் சில இடர்பாடுகளை இவ்வாரத்தில் நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும். எக்காரணத்தைக் கொண்டும் மனம் தளராமல் தாங்கள் மேற்கொண்டுவரும் முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வாருங்கள்.

வியாபாரம்:
வியாபாரிகள் முன்னேற்றம் எதையும் இந்த வாரம் எதிர்பார்க்கமுடியாது. சக வியாபாரிகளுடன் அடிக்கடி மோதல் போக்கு ஏற்படுவதால் வியாபாரத்தில் நாட்டம் செல்லாது. வீண் வாக்குவாதம் செய்யவேண்டாம்.

பெண்மணிகள்:
பெண்மணிகளுக்கு குடும்ப நிர்வாகம் செய்வதில் சிரமம் இருக்கக்கூடும். அலுவலகம் சென்றுவரும் பெண்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கக்கூடிய வாரமாக இது இருக்கக்கூடும்.

அறிவுரை:
எக்காரணத்தைக் கொண்டும் நிதானத்தை இழந்துவிடாதீர்கள்.

அனுகூல தினங்கள்: பிப் : 24, 25, 26
பிரதிகூல தினங்கள்: பிப் : 21, 22, 23, 27

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6
 சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் வரை)

குடும்பம்:
எந்த விஷயமாக இருந்தாலும் தந்தை அல்லது தாயின் ஆலோசனையைப் பெற்று பின்பு முடிவெடுப்பது தங்கள் வாழ்க்கையில் பிரச்சினைகள் எதுவும் ஏற்படாமலிருக்க உதவும். திருமணமாகி புத்திர பாக்கியம் கிடைக்கவில்லையே என மனம் வருந்தி வந்த உங்களுக்கு இவ்வாரத்தில் நற்செய்தி கிடைக்க வாய்ப்புள்ளது. தங்கள் உதவியை நாடி சிலர் வருவார்கள். சிம்ம ராசி அன்பர்கள் சிலர் தங்களால் இயன்ற உதவியைப் பணமாகவோ அல்லது பொருட்களாகவோ முதியோர் இல்லம் அல்லது குழந்தைகள் காப்பகம் போன்றவற்றிற்குக் கொடுப்பீர்கள். பெரியோர் ஆசி கிட்டும். நீதிமன்ற வழக்குகளில் இவ்வாரம் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.

உத்தியோகம்:
வேலை பார்த்துவரும் அன்பர்களுக்கு அலுவலகத்தில் கடின உழைப்பு ஏற்பட்டாலும் அதற்கேற்ற சலுகைகள் கிடைப்பதால் நிம்மதியாக இருக்கலாம். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

தொழில்:
தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோர் கடன் வாங்க முயற்சிக்க வேண்டாம். பின்பு அவற்றை அடைப்பதில் சிக்கல்கள் ஏற்படக்கூடும்.

வியாபாரம்:
புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருபவர்களுக்கு வெற்றிகரமான வாரமிது. வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து பொருட்களை வாங்கி அவற்றை விற்பனையும் செய்து வருவீர்கள்.

பெண்மணிகள்:
குடும்ப நிர்வாகத்தை ஏற்றுள்ள பெண்மணிகளுக்கு மகிழ்ச்சிகரமான வாரமிது என்றே சொல்லவேண்டும். வேலைக்குச் சென்றுவரும் பெண்களுக்கும் ஜெயமான வாரம்.

அறிவுரை:
செலவுகளைக் கட்டுப்படுத்திக்கொள்ள முயற்சியுங்கள்.

அனுகூல தினங்கள்: பிப் : 21, 22, 23, 24
பிரதிகூல தினங்கள்: பிப் : 25, 26, 27

அதிர்ஷ்ட எண்கள்: 4, 7
 கன்னி
(உத்திரம் 2_ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2_ம் பாதம் வரை)

குடும்பம்:
வீட்டில் அவ்வப்போது பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அவை அனைத்தும் உடனுக்குடன் சரியாகிவிடும். என்றாலும் நீங்கள் சற்று விட்டுக்கொடுத்து நடந்துகொள்வது நல்லது. வாகனத்தில் செல்லும்போது கூடுதல் கவனம் தேவை. சிறுபழுது ஏற்பட்டிருப்பினும் அதை அலட்சியப்படுத்தாமல் உடனடியாகச் சரிசெய்துவிடுவது நல்லது. கணவன் மனைவியிடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டைசச்சரவுகள் உண்டாகும். தங்களுடன் நெருக்கமாகப் பழகிய நபர் ஒருவரால் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. திருமணம் மற்றும் இதர சுபநிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை வாரத்தின் இறுதி நாட்களில் செய்வது நன்மைபயக்கும்.

உத்தியோகம்:
வேலைக்குச் சென்றுவரும் அன்பர்கள் மிகவும் கவனமாக இருந்துவர வேண்டியது அவசியம். ஏனெனில் தாங்கள் செய்யும் சிறு தவறுகூட பெரிய அளவில் பேசப்படக்கூடும் என்பதால்.

தொழில்:
தொழிலதிபர்களுக்கு நிம்மதியில்லா வாரமாக இது இருக்கக்கூடும். ஒரு பிரச்சினை முடிந்தவுடன் மற்றொரு பிரச்சினை ஏற்படக்கூடும். தங்களிடம் வேலை பார்த்து வருபவர்களிடம் கோபத்தைக் காட்டாதீர்கள்.

வியாபாரம்:
கொடுக்கல்_வாங்கலில் இந்த வாரம் ஈடுபட வேண்டாம். அதனால் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சக வியாபாரிகளுடன் மோதல் போக்கு ஏற்படக்கூடும். எனவே கவனம் தேவை.

பெண்மணிகள்:
குடும்ப நிர்வாகத்தைக் கவனித்துவரும் பெண்மணிகளுக்கு குழப்பமான வாரமிது. வேலை பார்த்துவரும் பெண்களுக்கு பணியிடத்தில் சிரமங்கள் ஏற்படக்கூடும்.

அறிவுரை:
கோபப்பட்டுப் பேசுவதைத் தவிர்த்திடுங்கள்.

அனுகூல தினங்கள்: பிப் : 23, 24, 25, 26
பிரதிகூல தினங்கள்: பிப் : 21, 22, 27

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
 துலாம்
(சித்திரை 3_ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3_ம் பாதம் வரை)

குடும்பம்:
இந்த ராசி அன்பர்கள் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருந்து வரவும். கண்ட நேரங்களில், கண்ட இடங்களில் உண்பதைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் நிம்மதியற்ற சூழல் காணப்படும். குடும்ப ரீதியாகவோ அல்லது தாங்கள் செய்துவரும் தொழில் சம்பந்தமாகவோ முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டியிருந்தால் அவற்றை வாரத்தின் பிற்பகுதியில் எடுக்கலாம். வேலை காரணமாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ கணவன்-_மனைவியர் இவ்வாரம் பிரிந்திருக்க நேரிடும். தாங்கள் எந்தவித தவறும் செய்யவில்லை என்று நன்கு தெரிந்திருந்தாலும் எங்கு தங்கள்மீது வீண்பழி ஏற்பட்டுவிடுமோ என்ற பயம் மனதில் குடிகொண்டிருக்கும்.

உத்தியோகம்:
அலுவலகத்தில் எந்தவிதமான முன்னேற்றத்தையும் இவ்வாரம் நீங்கள் எதிர்பார்க்க முடியாது. தங்கள் மீதிருந்து வந்த நல்ல அபிப்ராயம் குறைய வாய்ப்புள்ளது. காரணம், சக ஊழியர் ஒருவர் தங்களைப் பற்றி தவறான எண்ணத்தை உண்டாக்குவதே ஆகும்.

தொழில்:
ஏற்றுமதி_இறக்குமதித் துறையினர் சற்று கவனமாக இருந்து வருவது அவசியம். முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது நன்கு படித்துப் பார்த்து பின்பு கையெழுத்திடவும். எதிலும் அவசரம் வேண்டாம்.

வியாபாரம்:
வியாபார ரீதியான வெளியூர் பயணமொன்றை இவ்வாரத்தில் நீங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதனால் நன்மை இருக்குமா என்பது சந்தேகம்தான்.

பெண்மணிகள்:
இந்த வாரம் முழுவதும் உங்களுக்கு வேண்டியது பொறுமை மட்டுமே. எதிலும் அவசரப்படாதீர்கள். வேலைக்குச் சென்றுவரும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை திருப்திகரமாக இருக்காது.

அறிவுரை:
பயத்தை விட்டொழியுங்கள்.

அனுகூல தினங்கள்: பிப் : 21, 25, 26, 27
பிரதிகூல தினங்கள்: பிப் : 22, 23, 24

அதிர்ஷ்ட எண்கள்: 4, 5
 விருச்சிகம்
(விசாகம் 4_ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை வரை)

குடும்பம்:
நிதிநிலைமை நல்லபடி இருக்கும். செலவுகள் கட்டுக்கடங்கியிருக்கும். அதனால் குடும்பச் சூழ்நிலை திருப்திகரமாக இருக்கும். நிரந்தர நோயினால் அவதிப்பட்டு வருபவர்கள் உடல்நலனில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். குடும்பத்தில் நடக்கும் முக்கிய விஷயங்களை யாருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். ஏனெனில் தங்களுக்கு ஆதரவாக இருந்து வந்தவர்களே இப்போது மாறுவதற்கு வாய்ப்புள்ளது. மின் சாதனங்களைக் கையாளும்போது கூடுதல் கவனம் தேவை. வங்கிகளில் கடன் வாங்கியிருந்தால் அவற்றை படிப்படியாக அடைத்துவிட முயற்சியுங்கள். குழந்தைகளைப் பற்றிய கவலைகள் மனதில் குடிகொண்டிருக்கும். நீதிமன்ற வழக்குகளில் சாதகமான போக்கு தென்படும்.

உத்தியோகம்:
வேலை பார்த்துவரும் இடத்தில் சக ஊழியர்களினால் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். எனவே 'தானுண்டு; தன் வேலையுண்டு' என்றிருந்து வருவது நல்லது. தொழிற்சாலைகளில் பணிபுரிந்துவரும் அன்பர்கள் வேலையை கவனமாகப் பார்த்து வரவும். கவனச் சிதறல் எதுவும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும்.

தொழில்:
தொழில்துறையினருக்கு ஏற்பட்டுவந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். அதனால் தாங்கள் செய்துவரும் தொழிலில் முழுகவனத்தையும் செலுத்தி வரவும். வருமானம் அதிகரித்து காணப்படும்.

வியாபாரம்:
வியாபாரத்தில் இருந்துவரும் முன்னேற்றம் தொடர்ந்து நீடித்திருக்கும். அதனால் கவலை வேண்டாம். தாங்கள் மேற்கொண்டுவரும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

பெண்மணிகள்:
பெண்மணிகளுக்கு உற்சாகத்தைத் தரக் கூடிய வாரமாக இது அமையக்கூடும். வேலை பார்த்துவரும் பெண்கள் அலுவலகத்தில் எச்சரிக்கையாக இருந்துவர வேண்டிய தருணமிது.

அறிவுரை:
யாரையும் எளிதில் நம்பிவிடாதீர்கள்.

அனுகூல தினங்கள்: பிப் : 21, 22, 23, 27
பிரதிகூல தினங்கள்: பிப் : 24, 25, 26

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9
 தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1_ம் பாதம் வரை)

குடும்பம்:
வருமானத்தில் பாதிப்பு எதுவும் இருக்காது. வீண் செலவுகள் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை. குழந்தைகளின் கல்வி முன்னேற்றம் பாதிக்கப்படுவது மனக் கவலையை ஏற்படுத்தும். தாய்வழி உறவுகளால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு பின்பு சரியாகும். இறைவழிபாட்டில் கவனம் செலுத்துவதன் மூலம் மனதில் ஓரளவு நிம்மதி பிறக்கும். விவாக வயதிலுள்ள தனுசு ராசி அன்பர்களுக்கு சிறு முயற்சியிலேயே நல்ல வரன் அமைந்து நிச்சயத்திற்கான தேதி முடிவு செய்யப்படும். அது பெற்றோருக்கு மனநிறைவைத் தரும். கணவன்_மனைவி ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டாலும் சுமுகப் பேச்சுவார்த்தையின் மூலம் அதை சரிசெய்ய பாருங்கள்.

உத்தியோகம்:
தாங்கள் பார்த்துவரும் வேலையில் மட்டும் கவனத்தைச் செலுத்தி வருவது நல்லது. மற்றபடி கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வு, இதர சலுகைகள் போன்றவை தடையின்றிக் கிடைக்கும்.

தொழில்:
புதிய விஸ்தரிப்புத் திட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். சக பாகஸ்தர்களினால் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அவை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது.

வியாபாரம்:
விற்பனையில் இருந்த மந்தநிலை இப்போது சரியாகும். லாபம் வரத் தொடங்கும். தற்போது தாங்கள் செய்துவரும் வியாபாரத்தில் கவனத்தைச் செலுத்தி வரலாமே தவிர்த்து புதிய முயற்சிகளை மேற்கொள்ளாதீர்கள்.

பெண்மணிகள்:
பெண்மணிகளுக்கு நற்செய்தியொன்று இந்த வாரத்தில் வந்து சேரும். வேலை பார்த்துவரும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை திருப்திகரமாக இருக்கும்.

அறிவுரை:
குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்துங்கள்.

அனுகூல தினங்கள்: பிப் : 21, 22, 23
பிரதிகூல தினங்கள்: பிப் : 24, 25, 26, 27

அதிர்ஷ்ட எண்கள்: 3, 7
 மகரம்
(உத்திராடம் 2_ம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2_ம் பாதம் வரை)

குடும்பம்:
மகர ராசி அன்பர்கள் தாயாரின் உடல் நலனில் கவனத்தைச் செலுத்திவர வேண்டியது அவசியம். சாதாரண உபாதையாக இருப்பினும் அலட்சியமாக இருந்துவிட வேண்டாம். குடும்பத்தில் இருந்துவந்த மனஅமைதி இவ்வாரம் சற்று குறைய வாய்ப்புள்ளது. வாகனத்தில் ஏற்படும் பழுதினைச் சரிபார்க்க இவ்வாரம் சற்று செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். எதிர்பாராத வகையில் செலவுகள் ஏற்படுவது அதிருப்தியை உண்டாக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சினையொன்று முடிவுக்கு வராமல் இழுத்தடிக்கப்பட்டு வருவது மனநிம்மதியைப் பாதிக்கும். ஒரு சிலருக்கு புனித நதிகளான கங்கை, யமுனை, துங்கபத்ரா போன்ற இடங்களில் ஸ்நானம் செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

உத்தியோகம்:
வேலை பார்த்துவரும் அன்பர்களுக்கு அலுவலகத்தில் கடின உழைப்பு ஏற்படக்கூடும். சக ஊழியர்யாரேனும் விடுப்பில் சென்றிருந்தால் அவர்கள் வேலையையும் சேர்த்து நீங்கள் பார்க்க வேண்டியிருக்கும்.

தொழில்:
தொழில் செய்துவரும் இடத்தில் அவ்வப்போது பிரச்சினைகள் ஏற்படக்கூடும். எனவே நீங்கள் பொறுமையாக இருந்து வருவது அவசியம். வீண்செலவுகள் செய்வதைத் தவிர்த்திடுங்கள்.

வியாபாரம்:
வியாபாரிகளுக்கு அனுகூலமில்லாத வாரமிது என்றே சொல்லவேண்டும். தாங்கள் செய்துவரும் வியாபாரத்தில் கவனத்தைச் செலுத்த முடியாதபடி சூழ்நிலை நிலவும். அதனால் லாபம் குறையும்.

பெண்மணிகள்:
குடும்ப நிர்வாகத்தைக் கவனித்துவரும் பெண்மணிகளுக்கு அதிருப்தியான வாரமிது என்றே சொல்ல வேண்டும். பணிக்குச் சென்றுவரும் பெண்களுக்கும் அதுபோலவே.

அறிவுரை:
ஆலய தரிசனம் மனநிம்மதியைத் தரும்.

அனுகூல தினங்கள்: பிப் : 21, 22, 23, 24
பிரதிகூல தினங்கள்: பிப் : 25, 26, 27

அதிர்ஷ்ட எண்கள்: 1, 2
 கும்பம்
(அவிட்டம் 3_ம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3_ம் பாதம் வரை)

குடும்பம்:
கும்ப ராசியினருக்கு அவ்வப்போது உடற்சோர்வு, உஷ்ணம் போன்ற உபாதைகள் ஏற்படக்கூடும். என்றாலும் அவை அனைத்தும் ஓய்வெடுப்பதன் மூலம் சரியாகும். கவலைப்பட வேண்டாம். வீட்டில் வசதிக்குக் குறைவிராது. பணவரவு நல்லபடி இருக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக வரத் தொடங்கும். வாடகை வீட்டில் வசித்துவரும் இந்த ராசியினர் சிலருக்கு சொந்தவீடு அமையும் யோகம் அமைந்துள்ளது. அவ்வப்போது மனதைரியமின்றி நீங்கள் காணப்பட்டாலும் சில முக்கிய முடிவுகளை இவ்வாரம் துணிந்து எடுப்பீர்கள். அதனால் ஆதாயம் உண்டு.

உத்தியோகம்:
புதிய வேலைக்கு முயற்சித்து காத்திருக்கும் அன்பர்களுக்கு வெற்றிகரமான வாரமிது. எதிர்பார்த்த நிறுவனத்தில், நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கக்கூடும். ஏற்கெனவே வேலை பார்த்துவரும் அன்பர்களுக்கும் மகிழ்ச்சிகரமான வாரம் இது. சக ஊழியர்களின் உதவி கிடைக்கும்.

தொழில்:
தொழில் ரீதியான வெளிநாட்டுப் பயணமொன்றை இவ்வாரத்தில் நீங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதனால் நீங்கள் நன்மையடைய வாய்ப்புள்ளது. புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

வியாபாரம்:
வியாபாரத்தை விரிவுபடுத்த வேண்டுமென்பதற்காகப் பணத்தை அதிக அளவில் செலவழிக்க வேண்டாம். குறைந்த அளவில் முதலீடு செய்து முயற்சிகளை மேற்கொண்டுவாருங்கள். அதனால் நன்மை இருக்கும்.

பெண்மணிகள்:
பெண்மணிகள் நேரம் கிடைக்கும்போது ஓய்வெடுத்துக்கொள்வது நல்லது. அலுவலகம் சென்றுவரும் பெண்களுக்கு நிர்வாகத்தினரிடமிருந்து பாராட்டுகள் கிடைக்கும்.

அறிவுரை:
அலைச்சலைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

அனுகூல தினங்கள்: பிப் : 21, 22, 23
பிரதிகூல தினங்கள்: பிப் : 24, 25, 26, 27

அதிர்ஷ்ட எண்கள்: 3, 4
 மீனம்
(பூரட்டாதி 4_ம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி வரை)

குடும்பம்:
இந்த ராசி அன்பர்கள் ஒரு சிலருக்கு கண் மற்றும் வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படக்கூடும். அதனால் மருத்துவச் செலவுகள் இருக்கும். வருமானம் நல்லபடி இருப்பதால் நீங்கள் அதைச் சமாளித்துவிடலாம். குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளின் காரணமாக நிம்மதியிருக்காது. எதிர்பாராத விதமாக வெளியூர் பயணமொன்றை இவ்வாரத்தில் நீங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். தாங்கள் சிரமப்படும் தருணத்தில் நெருங்கிய நண்பர் ஒருவரின் உதவி கிடைப்பது மனஆறுதலைத் தரும். விவாக வயதில் பெண் அல்லது பிள்ளை இருப்பின் அவர்களுக்கான வரன் தேடும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

உத்தியோகம்:
உத்தியோகஸ்தர்கள் சிலருக்கு வேலையில் மாற்றமோ அல்லது ஊர் மாற்றமோ ஏற்படக்கூடும். அதனால் தாற்காலிகமாகத் தங்கள் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்க நேரிடும். அதைக் காரணம் காட்டி கிடைக்கும் சில நல்ல வாய்ப்பினைத் தவற விட்டுவிடாதீர்கள்.

தொழில்:
தொழில்துறையினருக்கு எதிர்பார்த்த இடத்திலிருந்து நிதியுதவிகள் கிடைப்பதில் தடங்கலும், தாமதமும் ஏற்படக்கூடும். அதனால் தொழில் முன்னேற்றம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

வியாபாரம்:
வெளிநாடுகளிலிருந்து பொருட்களை அதிக அளவில் இறக்குமதி செய்யவேண்டாம். ஏனெனில் அவை விற்பனையாகாவிட்டால் லாபம் கிடைப்பது சிரமமாகிவிடும். எனவே கவனம் தேவை.

பெண்மணிகள்:
வருமானம் திருப்திகரமாக இருந்தாலும் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. வேலைக்கு முயற்சித்து வரும் பெண்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

அறிவுரை:
தேவையற்ற செலவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

அனுகூல தினங்கள்: பிப் : 24, 25, 26, 27
பிரதிகூல தினங்கள்: பிப் : 21, 22, 23

அதிர்ஷ்ட எண்கள்: 5, 7

RSS Movies Shop

This website can secure your private information using a SSL Certificate. Information exchanged with any address beginning with https is encrypted using SSL before transmission.


About us | Register | Font Help | Feedback | Ad Tariff | Faq | Site Map
Copyright © 2010 Noble Broadcasting Corporation Private Limited . Allrights reserved.
Best view under 1024x764 Resoultion.