Email
Password:
Remember Me  
Forgot Password   New Registration
About us | Register | Plan Details |Font Help| Feedback| Ad Tariff | Faq | Site Map|RSSimageRss  
News Headline
Dotcom Special
    Weekly Horoscope
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ஒருவார பலன்கள்.
19-05-2013 முதல் 25-05-2013 வரை
 மேஷம்
(அசுவினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் வரை)

குடும்பம்:
ஜென்ம ராசியில் செவ்வாய், கேது; குடும்ப ஸ்தானத்தில் குரு, சூரியன், சுக்கிரன், புதன்; பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன்; சப்தம ஸ்தானத்தில் சனி(வ), ராகு. இந்த வாரம் வரவைக் காட்டிலும் செலவுகள் கூடும். கணவன், மனைவியரிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். மனைவியின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். திருமண முயற்சிகளில் தடைகள் ஏற்பட்டு தாமதப்படக்கூடும். மற்றும் சில விஷயங்களில் பண விரயம், ஏமாற்றம் ஏற்படலாம். நீதிமன்ற வழக்குகளில் நல்ல போக்கு தென்படவில்லை. சொத்துப் பிரச்சினைகள் நீடிக்கும். சிலருக்கு வீண் பழி ஏற்படலாம்.

உத்தியோகம்:
பொறுப்புகள் கூடுதலாகும். உழைப்பு கடினமாகும். வேலையில் மாற்றம் ஏற்படக்கூடும். உயரதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படும்போது பொறுமையுடன் செயல்படுங்கள். குருவின் பார்வை சனி, ராகுவுக்கு ஏற்படுவதால் தீய பலன்கள் குறையும்.

தொழில்:
அரசாங்க அதிகாரிகளால் தொழிலதிபர்களுக்குத் தொல்லைகள் ஏற்படக்கூடும். பண விரயமும் அதிகமாகும். தொழிலில் பின்னடைவு காணப்படலாம். வருமானம் பாதிக்கப்படலாம்.

வியாபாரம்:
போட்டிகள் அதிகரிக்கும். விற்பனையும், லாபமும் சரியக்கூடும். கொடுக்கல், வாங்கல் சிரமம் தரக்கூடும்.

பெண்மணிகள்:
பணப் பிரச்சினைகள் ஏற்படும். கணவருடன் கருத்து வேறுபாடும் உண்டாகும். உடல் உபாதைகள் தோன்றும். வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்குப் பொறுமை தேவை.

அனுகூல தினங்கள்: மே : 19, 20, 21, 22
பிரதிகூல தினங்கள்: மே : 23, 24, 25

அதிர்ஷ்ட எண்கள்: 6, 7
 ரிஷபம்
(கிருத்திகை 2_ம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2_ம் பாதம் வரை)

குடும்பம்:
ஜென்ம ராசியில் குரு, சூரியன், சுக்கிரன், புதன்; சுக ஸ்தானத்தில் சந்திரன்; ருண ஸ்தானத்தில் சனி(வ), ராகு; விரய ஸ்தானத்தில் செவ்வாய், கேது. நல்ல வாரமாகும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நிகழும். திருமண முயற்சிகள் கைகூடும். சுபச்செலவுகள் ஏற்படும். வருமானம் நல்லபடி இருப்பதால் குடும்பச் செலவுகளை எளிதில் சமாளித்து விடலாம். சிலருக்குச் சொந்த வீடு அமையலாம். நீதிமன்ற வழக்குகள் சாதகமாக முடிவடையும். ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். புதன் ரிஷபத்தில். கொடுக்கல்_வாங்கல் ஒழுங்காகும். பிள்ளைகளின் கல்வி, உடல்நலன் மேம்படும். அவர்களுக்கு நல்ல வேலையும் கிடைக்கும். சுக்கிரனும் ரிஷபத்தில். உடல்நலன் சீராகும். சேமிப்பு உயரும். ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும்.

உத்தியோகம்:
பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். மேலதிகாரிகள், நிர்வாகத்தினர் ஆதரவு மன மகிழ்ச்சியை அளிக்கும். இடமாற்றமும் சிலருக்கு ஏற்படும்.

தொழில்:
தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உற்பத்தி உயரும். பொருளாதார நிலை சீராகும்.

வியாபாரம்:
சிறந்த முன்னேற்றத்தைக் காணலாம். புதிய முதலீடுகளைப் புதிய தொழில்துறைகளில் செய்வது லாபகரமாக இருக்கும். விற்பனையும், லாபமும் கணிசமாக உயரும்.

பெண்மணிகள்:
குடும்ப வருமானம் பெருகும். எனவே செலவுகளைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்குப் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும்.

அனுகூல தினங்கள்: மே : 19, 20, 24, 25
பிரதிகூல தினங்கள்: மே : 21, 22, 23

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5
 மிதுனம்
(மிருகசீரிஷம் 3_ம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3_ம் பாதம் வரை)

குடும்பம்:
தைரிய ஸ்தானத்தில் சந்திரன்; பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி(வ), ராகு; லாப ஸ்தானத்தில் செவ்வாய், கேது; விரய ஸ்தானத்தில் குரு, சூரியன், சுக்கிரன், புதன். வருமானம் நன்கிருக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளும், சுபச்செலவுகளும் ஏற்படக்கூடும். அலுவலகப் பொறுப்பு காரணமாகக் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்க நேரிடலாம். எதிர்பாராத செலவுகள் ஏற்படும் என்றாலும் பொருளாதாரப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை. தந்தையின் உடல்நலனில் கவனம் வேண்டும். நீதிமன்ற வழக்குகள் முடிவின்றி நீடிக்கும். ரிஷப ராசியில் புதன். செலவுகள் மேலும் அதிகமாகக்கூடும். குடும்பப் பொறுப்புகளும் அதிகரிக்கும். உடல்நலனுக்காகச் செலவிட வேண்டிவரும்

உத்தியோகம்:
அலுவலகச் சூழ்நிலை குழப்பத்தை ஏற்படுத்தும். உழைப்பு அதிகமானாலும் அதற்கேற்ற அங்கீகாரம் உங்களுக்குக் கிடைக்காமற் போகலாம். சிலருக்கு விருப்பத்திற்கு மாறான இடமாற்றம் ஏற்படும்

தொழில்:
சற்று எச்சரிக்கை வேண்டும். பண விஷயங்களி லும் கூடுதல் ஜாக்கிரதை தேவை. எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்காமல் போகலாம். எனவே உற்பத்தியும், வருமானமும் குறையக்கூடும்.

வியாபாரம்:
கொடுக்கல், வாங்கலில் எச்சரிக்கையோடு செயல்படவேண்டும். உங்களுக்கு வரவேண்டிய பணமும் வருவது தாமதப்படலாம். விற்பனையும், லாபமும் குறையும்.

பெண்மணிகள்:
குடும்ப வருமானம் அதிகரிக்கும். செலவுகளும் அதிகரிக்கும். வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்குப் பொறுமையும், நிதானமும் தேவை.

அனுகூல தினங்கள்: மே : 19, 20, 21, 22
பிரதிகூல தினங்கள்: மே : 23, 24, 25

அதிர்ஷ்ட எண்கள்: 2, 4
 கடகம்
(புனர்பூசம் 4_ம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் வரை)

குடும்பம்:
குடும்ப ஸ்தானத்தில் சந்திரன்; சுக ஸ்தானத்தில் சனி(வ), ராகு; ஜீவன ஸ்தானத்தில் செவ்வாய், கேது; லாப ஸ்தானத்தில் குரு, சூரியன், சுக்கிரன், புதன்; ரிஷப ராசியில் புதன். எடுத்த காரியங்களை நண்பர்கள் உதவிகளுடன் நிறைவேற்றுவீர்கள். வெளிநாடு செல்ல சிலருக்கு வாய்ப்பு ஏற்படும். வேலையில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். சுக்கிரனும் ரிஷப ராசியில். பகைவர் பலம் மேலோங்கும். பண விஷயத்தில் எச்சரிக்கை தேவை. வேலை காரணமாக அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்து நடந்துகொள்ளுங்கள். ஆடை, ஆபரணங்களுக்கும், வீட்டிற்குத் தேவைப்படும் விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதற்கும் பணம் அதிகம் விரயமாகும். கணவன்_மனைவியரிடையே கருத்து வேறுபாடு ஏற்படும்.

உத்தியோகம்:
வேலையில் ஏற்பட்ட முன்னேற்றம் தொடர்ந்து நீடிக்கும். நிர்வாகத்தினர் ஆதரவும், உடன் உழைப்பவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

தொழில்:
புதிய ஒப்பந்தப் பணிகளை எதிர்பார்க்கலாம். உற்பத்தி உயரும். வருமானம் பெருகும்.

வியாபாரம்:
வியாபாரம் தொடர்ந்து நல்லபடி நடந்துவரும். விற்பனையும், லாபமும் கணிசமாக உயரும். என்றாலும் கொடுக்கல்_வாங்கல் சிரமம் தரலாம். வரவேண்டிய பாக்கித் தொகை தாமதப்படும்.

பெண்மணிகள்:
குடும்ப வருமானம் அதிகரிக்கும். இந்த வாரமும் செலவுகள் தொடர்ந்து அதிகரித்துவரும். வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்கு முன்னேற்றம் ஏற்படும்.

அனுகூல தினங்கள்: மே : 22, 23, 24, 25
பிரதிகூல தினங்கள்: மே : 19, 20, 21

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
 சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் வரை)

குடும்பம்:
ஜென்ம ராசியில் சந்திரன்; தைரிய ஸ்தானத்தில் சனி(வ), ராகு; பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது; ஜீவன ஸ்தானத்தில் குரு, சூரியன், சுக்கிரன், புதன். இந்த வாரம் வருமானம் நல்லபடி இருந்துவரும். என்றாலும் செலவுகளும் சமமாகவே இருக்கும். கணவன்_மனைவி ஒற்றுமை கூடும். சிலருக்கு இடமாற்றம், வேலை மாற்றம் ஏற்படலாம். புதன் ரிஷப ராசியில். தொழில் வளர்ச்சி மேலோங்கும். கூட்டாளிகள் வியாபாரத்தைவிட்டு விலகுவர். புதிய கூட்டாளிகள் வந்து சேர்வர். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சிகள் செய்யலாம். சுக்கிரனும் ரிஷப ராசியில். அரசியல்வாதிகளுக்கு நல்ல செய்தி வரும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

உத்தியோகம்:
வேலையில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பதவி மாற்றம், ஊர் மாற்றம் கிடைக்கும்.

தொழில்:
தொழிலிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய கான்டிராக்டுகள் கிடைக்கும். உற்பத்தி உயரும். வருமானம் பெருகும்.

வியாபாரம்:
போட்டிகள் குறையும். விற்பனை உயரும். லாபம் பெருகும். வரவேண்டிய பணம் வருவதும், கொடுக்கல்_ வாங்கலும் சீராகும்.

பெண்மணிகள்:
வருமானம் அதிகரிக்கும். எனவே குடும்பச் செலவுகளைச் சுலபமாகச் சமாளிக்கலாம். வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்குப் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும்.

அனுகூல தினங்கள்: மே : 22, 23, 24
பிரதிகூல தினங்கள்: மே : 19, 20, 21, 25

அதிர்ஷ்ட எண்கள்: 2, 4
 கன்னி
(உத்திரம் 2_ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2_ம் பாதம் வரை)

குடும்பம்:
குடும்ப ஸ்தானத்தில் சனி(வ), ராகு. அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், கேது; பாக்கிய ஸ்தானத்தில் குரு, சூரியன், சுக்கிரன், புதன்; விரய ஸ்தானத்தில் சந்திரன். இந்த வாரம் வரவும், செலவும் சமமாகவே இருந்துவரும். உடல்நலனில் மட்டும் கவனம் கொள்ள வேண்டியது அவசியம். கடன் சுமை குறையலாம். புதிய கடன்கள் வாங்கவேண்டியும் வரலாம். புதன் ரிஷபத்தில். பொன், பொருள் வந்து சேரும். நண்பர்களின் உதவியோடு தொழிலை மேம்படுத்தலாம். சுக்கிரனும் ரிஷப ராசியில். உங்கள் முயற்சிகளில் ஏற்பட்ட தடைகள் விலகும். தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம்.

உத்தியோகம்:
பணியிடத்தில் பிரச்சினைகள் ஏற்படலாம். முக்கியமாக, முன்கோபத்தையும், படபடப்பான பேச்சையும் தவிர்க்கவேண்டும்.

தொழில்:
தொழிலதிபர்களுக்கும் பிரச்சினைகள் தோன்றும். என்றாலும் தொழிலில் முன்னேற்றம் தொடரும். உற்பத்தி உயரும். வருமானம் உயரும்.

வியாபாரம்:
உங்களுக்கு வரவேண்டிய பாக்கித் தொகை தாமதமாகும். கொடுக்கல்_வாங்கல் சிரமம் தரும். என்றாலும் விற்பனையும், லாபமும் நன்கு உயரக்கூடும்.

பெண்மணிகள்:
குடும்பச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்துவரும். வருமானமும் உயரும். எனவே வரவும், செலவும் சமமாகவே இருக்கும். வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

அனுகூல தினங்கள்: மே : 19, 20, 21, 22
பிரதிகூல தினங்கள்: மே : 23, 24, 25

அதிர்ஷ்ட எண்கள்: 5,7
 துலாம்
(சித்திரை 3_ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3_ம் பாதம் வரை)

குடும்பம்:
ஜென்ம ராசியில் சனி(வ), ராகு; சப்தம ஸ்தானத்தில் செவ்வாய், கேது; அஷ்டம ஸ்தானத்தில் குரு, சூரியன், சுக்கிரன், புதன்; லாப ஸ்தானத்தில் சந்திரன். இந்த வாரம் முன்கோபத்தையும், எரிச்சலான பேச்சையும் தவிர்த்துவிடுங்கள். கொடுக்கல்_வாங்கலில் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். வரவேண்டிய பாக்கித் தொகை வசூலும் தாமதப்படும். உடல்நலனிலும் கவனம் வேண்டும். குடும்பத்தில் கணவன்_மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும். புதன் ரிஷப ராசியில். எடுத்த காரியங்கள் நடைபெறும். உற்றார், உறவினர், நெருங்கிய நண்பர்கள் இனி பகை மறந்து உதவ முன்வருவர். ரிஷப ராசியில் சுக்கிரன். ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். சுபச் செலவுகள் ஏற்படும் .

உத்தியோகம்:
உயரதிகாரிகளுடன் மனவேறுபாடுகள் ஏற்பட்டிருக்கலாம். நிர்வாகத்தினரின் கோபத்திற்கும் ஆளாகியிருக்- கலாம். அந்த நிலைமையில் இப்போது மாற்றம் ஏற்படும்.

தொழில்:
தொழிலதிபர்களுக்கு மாற்றங்கள் ஏற்படலாம். புதிய ஒப்பந்தங்களை இப்போது எதிர்பார்க்கலாம். உற்பத்தியும், வருமானமும் உயரும்.

வியாபாரம்:
விற்பனையும், லாபமும் தொடர்ந்து நல்லபடி நீடிக்கும். என்றாலும் கொடுக்கல், வாங்கலில் சிக்கல்கள் தோன்றக்கூடும்.

பெண்மணிகள்:
குடும்ப வருமானம் அதிகரிக்கும். செலவு- களும் தொடர்ந்து அதிகரித்துவரும். வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் நிலைமை மேம்படும்.

அனுகூல தினங்கள்: மே : 21, 22, 23, 24
பிரதிகூல தினங்கள்: மே : 19, 20, 25

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3
 விருச்சிகம்
(விசாகம் 4_ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை வரை)

குடும்பம்:
ருண ஸ்தானத்தில் செவ்வாய், கேது; சப்தம ஸ்தானத்தில் குரு, சூரியன், சுக்கிரன், புதன்; ஜீவன ஸ்தானத்தில் சந்திரன்; விரய ஸ்தானத்தில் சனி(வ), ராகு; ரிஷப ராசியில் புதன். உற்றார், உறவுமுறை சீராகும். சுபநிகழ்ச்சிகள் நடக்கும். உடன்பிறந்தவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். ரிஷப ராசியில் சுக்கிரன். ஆடை, ஆபரணங்கள் சேரும். வங்கியும் மற்ற நிதிநிறுவனங்களும் உங்களுக்குப் பணஉதவி செய்ய தயாராய் இருக்கும். சிலருக்குப் புதிய வாகன யோகம் ஏற்படும்.

உத்தியோகம்:
பிரச்சினைகள் இனி படிப்படியாய் குறைந்துவரும். நல்ல மாற்றங்களை இனி எதிர்பார்க்கலாம். பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும்

தொழில்:
தொழிலதிபர்களுக்குச் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். எனினும் தொழில் வளர்ச்சியில் பாதிப்பு எதுவும் இராது. உற்பத்தியும், பொருளாதார நிலையும் உயரும். வியாபாரம் : போட்டிகள் குறையும். விற்பனை உயரும். லாபமும் கணிசமாகப் பெருகும் சாத்தியக்கூறு உள்ளது. என்றாலும் வரவேண்டிய பணம் வசூலிலும், கொடுக்கல்_ வாங்கலில் சிக்கல்களும், தாமதமும் ஏற்படலாம்.

வியாபாரம்:
வருமானம் சீராக இருந்துவரும். குடும்பச் செலவுகளும் தொடர்ந்து அதிகரித்த நிலையிலேயே இருக்கும்.

பெண்மணிகள்:
வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

அனுகூல தினங்கள்: மே : 22, 23, 24
பிரதிகூல தினங்கள்: மே : 19, 20, 21, 25

அதிர்ஷ்ட எண்கள்: 2,4
 தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1_ம் பாதம் வரை)

குடும்பம்:
பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது; ருண ஸ்தானத்தில் குரு, சூரியன், சுக்கிரன், புதன்; பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன்; லாப ஸ்தானத்தில் சனி(வ), ராகு; ரிஷபத்தில் புதன், சுக்கிரன். பகைவர்களின் எதிர்ப்புகள் குறையும். உங்கள் வாழ்க்கையில் இதுவரை ஏற்பட்ட தடைகள் விலகும். உற்றார், உறவினர் உதவிக்கு வருவர். செலவுகளைச் சிக்கனப்படுத்தி முயற்சி செய்தால் சேமிக்கவும் முடியும். மனைவியால் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். எதிலும் கொஞ்சம் எச்சரிக்கை தேவை. எடுத்த காரியங்களில் சில இடையூறுகள் நேரிடலாம். வேலையில் உள்ளவர்கள் உடனிருப்பவர்களையும், உயரதிகாரிகளையும் அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும். ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். வீட்டிற்குத் தேவைப்படும் விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதில் பணம் விரயமாகும்

உத்தியோகம்:
அலுவலகத்தில் அனைவரிடமும் விட்டுக் கொடுத்து அனுசரித்து நடந்துகொள்ளுங்கள் .

தொழில்:
தொழிலதிபர்களுக்கும் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். என்றாலும் தொழில் வளர்ச்சி தொடரும். உற்பத்தி உயரும். வருமானம் உயரும்.

வியாபாரம்:
வியாபாரிகளுக்கு விற்பனை உயரும். லாபம் உயரும். என்றாலும் கொடுக்கல்_வாங்கலில் கூடுதல் எச்சரிக்கை தேவை.

பெண்மணிகள்:
குடும்ப வருமானம் அதிகரிக்கும். எனவே செலவுகளைச் சமாளித்து விடலாம். வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்குச் சலுகைகள் கிடைக்கும்.

அனுகூல தினங்கள்: மே : 19, 20, 21
பிரதிகூல தினங்கள்: மே : 22, 23, 24, 25

அதிர்ஷ்ட எண்கள்: 1,2
 மகரம்
(உத்திராடம் 2_ம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2_ம் பாதம் வரை)

குடும்பம்:
சுக ஸ்தானத்தில் செவ்வாய், கேது; பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு, சூரியன், சுக்கிரன், புதன்; அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன்; ஜீவன ஸ்தானத்தில் சனி(வ), ராகு; வக்ர கதியில் சனி சஞ்சரிப்பதால் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து பின்னர் செயல்படுவது அவசியம். மருத்துவச் செலவுகளும் ஏற்படும். புதன், சுக்கிரன் ரிஷபத்தில். பிள்ளைகள் கல்வி மற்றும் உடல்நலனுக்காக அதிகம் செலவிட வேண்டிவரும். வேலையில் உள்ளவர்களுக்குப் பிரச்சினைகள் எழக்கூடும். ஊர் மாற்றம், இடமாற்றம் சிலருக்கு ஏற்படலாம். இதனால் கவலைகள் உண்டாகும். பொதுவாக இந்த வாரம் வரவைவிட செலவுகள் அதிகமாகலாம். அருகில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துகொள்ளுங்கள். இதனால் பல பிரச்சினைகளைத் தவிர்த்துவிடலாம். உடல்நலனிலும் கவனம் தேவை.

உத்தியோகம்:
வேலையில் உள்ளவர்களுக்கு அவ்வப்போது ஏதாவது பிரச்சினைகள் எழக்கூடும். பணப் பொறுப்பில் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும்.

தொழில்:
தொழிலதிபர்களுக்கும் பிரச்சினைகள் எழக்கூடும். தொழிலுக்குப் பொருளாதார உதவிகள் கிடைப்பது தாமதப்படும். எனினும் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படாது. உற்பத்தி உயரும். வருமானம் உயரும்.

வியாபாரம்:
போட்டிகள் நீடிக்கும். விற்பனையும், வருமானமும் சீராக இருக்கும். எனினும் கொடுக்கல்_வாங்கல் சிரமம் தரலாம்.

பெண்மணிகள்:
குடும்ப வருமானம் அதிகரிக்கும். இந்த வாரமும் செலவுகள் அதிகரித்த நிலையிலேயே இருக்கும். வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்கு உழைப்பும், பொறுப்பும் அதிகரிக்கும் .

அனுகூல தினங்கள்: மே : 21, 22, 23
பிரதிகூல தினங்கள்: மே : 19, 20, 24, 25

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
 கும்பம்
(அவிட்டம் 3_ம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3_ம் பாதம் வரை)

குடும்பம்:
தைரிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது; சுக ஸ்தானத்தில் குரு, சூரியன், சுக்கிரன், புதன்; சப்தம ஸ்தானத்தில் சந்திரன்; பாக்கிய ஸ்தானத்தில் சனி(வ), ராகு. 4_ல். அதாவது அர்த்தாஷ்டம குரு ஜீவன ஸ்தானத்தைப் பார்ப்பதால் வீடு மாற்றங்கள், இடமாற்றங்கள், வேலையில் மாற்றங்கள் ஏற்படலாம். சனி வக்ர கதி இயக்கத்தால் நன்மைகளும், அசுப பலன்களும் மாறி மாறி வரும். புதன், சுக்கிரன் ரிஷப ராசியில். தாயின் உடல்நலனில் அக்கறை கொள்ள வேண்டிவரும். வீட்டிற்குத் தேவைப்படும் விலையுயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். அருகில் உள்ளவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளுங்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். கொடுக்கல்_வாங்கல் சீராகும். சொத்துப் பிரச்சினைள் நல்ல முடிவுக்கு வரும்.

உத்தியோகம்:
ஒரு சிலருக்கு வேலையில் அல்லது இடத்தில் மாற்றம் ஏற்படலாம். எனவே பொறுமையும், நிதானமும் தேவை.

தொழில்:
புதிய மூலதனத்தில் புதிய தொழில் துறைகளைத் தொடங்கலாம். வெற்றிகரமாக நடக்கும். தற்போதைய தொழிலும் நன்கு நடக்கும். உற்பத்தியும், வருமானமும் சீராக இருக்கும்.

வியாபாரம்:
விற்பனை உயரும். லாபம் கணிசமாக உயரக்கூடும். கொடுக்கல்_வாங்கல் சிக்கல்கள் நீங்கி சீராகும்.

பெண்மணிகள்:
குடும்பச் செலவுகள் அதிகரித்துவரும். என்றாலும் வரவு நன்கிருப்பதால் செலவுகளைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்கு மாற்றங்கள் ஏற்படலாம்.

அனுகூல தினங்கள்: மே : 19, 23, 24, 25
பிரதிகூல தினங்கள்: மே : 20, 21, 22

அதிர்ஷ்ட எண்கள்: 4, 6
 மீனம்
(பூரட்டாதி 4_ம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி வரை)

குடும்பம்:
குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், கேது; தைரிய ஸ்தானத்தில் குரு, சூரியன், சுக்கிரன், புதன்; ருண ஸ்தானத்தில் சந்திரன்; அஷ்டம ஸ்தானத்தில் சனி(வ), ராகு. சனியின் வக்ர கதி சஞ்சாரத்தால் உடல்நலன் சீராகும். உங்களது முயற்சிகள் கைகூடும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. சுக்கிரன், புதன் ரிஷபத்தில் சஞ்சரிக்கிறார்கள். பொருளாதார நிலை திருப்தி தரும். தாய்வழி உறவினர்களால் ஆதாயங்கள் உண்டாகும். சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பல வாய்ப்புகள் கிடைக்கும். திருமண முயற்சிகள் கைகூடும்.

உத்தியோகம்:
வேலையில் உள்ளவர்களுக்கு இடமாற்றமோ, வேலை மாற்றமோ ஏற்படலாம். பொறுமையுடனும், நிதானத்துடனும் செயல்பட வேண்டும்.

தொழில்:
பணப் பற்றாக்குறை ஏற்படலாம். தொழிலதிபர்- களுக்குக் கடன் உதவிகள் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படலாம். எனினும் உற்பத்தி தடைபடாது. வருமானமும் சீராக இருக்கும்.

வியாபாரம்:
வியாபாரிகள் கொடுக்கல்_வாங்கலில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். ஆயினும் விற்பனையும், வருமானமும் சீராக இருக்கும்.

பெண்மணிகள்:
குடும்ப வருமானம் திருப்தி தரும். குடும்பச் செலவுகள் இந்த வாரமும் அதிகரித்துவரும். வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்குப் பிரச்சினைகள் தோன்றும். பின்னர் தீரும்.

அனுகூல தினங்கள்: மே : 19, 20, 21, 25
பிரதிகூல தினங்கள்: மே : 22, 23, 24

அதிர்ஷ்ட எண்கள்: 5,9
........................................................................................................................................................................................................................................................
RSS Movies Shop
........................................................................................................................................................................................................................................................
........................................................................................................................................................................................................................................................

About us | Register | Font Help | Feedback | Ad Tariff | Faq | | Watch Online Tamil Movies | Site Map
Copyright © 2010 Noble Broadcasting Corporation Private Limited . Allrights reserved.
Best view under 1024x764 Resoultion.